'ஊசி' அரிசி உடம்புக்கு நல்லதா? --- ஹெல்த் ஸ்பெஷல்,

'ஊசி' அரிசி உடம்புக்கு நல்லதா? பாஸ்ட்புட் கடைகளில் ஃப்ரைடுரைஸ் செய்வதில் ஆரம்பித்து சாலையோர பிரியாணி, தலப்பாக்கட்டு, உருமாக் க...

'ஊசி' அரிசி உடம்புக்கு நல்லதா?
பாஸ்ட்புட் கடைகளில் ஃப்ரைடுரைஸ் செய்வதில் ஆரம்பித்து சாலையோர பிரியாணி, தலப்பாக்கட்டு, உருமாக் கட்டு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை பிரியாணி மற்றும் ஃப்ரைடுரைஸ் செய்ய  பயன்படுத்தப்படும் பாஸ்மதி அரிசி இன்று நம் வீடு வரை வந்து விட்டது. இதை உயர் வகுப்பினர் முதல் சாதாரண மக்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர். விலை அதிகரிக்க அதிகரிக்க அரிசியின் நீளமும் அதிகரிக்கிறது. சில சமயம், இது அரிசியா அல்லது சேமியாவா என்று குழப்பம் வந்துவிடுகிறது.  
 பாஸ்மதி அரிசியின் மீது மோகம் அதிகமானதற்கு என்ன காரணம்? இந்த அரிசி சாப்பிடுவதால் ஏதேனும் பாதிப்பு வருமா? விளக்கம் தருகிறார் உணவு கட்டுபாட்டு நிபுணர் இளவரசி.
''குழையக் குழைய சாதத்தை வடித்து, பருப்பு, நெய் சேர்த்து குழந்தைகளுக்கு ஊட்டும் வழக்கம் இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஊசி ஊசியான அரிசியில் ஃப்ரைடு ரைஸ், எலுமிச்சை சாதம், புளி சாதம்தான் பெரும்பாலான பள்ளிக்குழந்தைகளின் டிபன் பாக்ஸை நிரப்பி இருக்கின்றன. திருமணங்களில்கூட, பாஸ்மதி அரிசியையே பயன்படுத்துகின்றனர். அரிசியின் நீளத்தில்தான் குடும்பத்தின் கௌரவம் உள்ளது என்று மிகவும் நீளமான அரிசியை விரும்புகிறார்கள். அதற்கு அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர். இதன் விலை கிலோ 70 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரிசியின் நீளத்தைப் பொருத்து விலை மாறுகிறது. ஐ.ஆர்- 20, 30, பொன்னி, சம்பா, குருணை இதெல்லாம் இப்போது பார்க்கவே முடிவதில்லை. பொதுவாக, பாஸ்மதி அரிசியை எல்லோரும் விரும்ப காரணம் அதன் நீளம், அழகான வடிவம். மற்ற அரிசியை விட இது வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிகிறார்கள். சமைக்கறதும் ரொம்பச் சுலபமா இருக்கும். இந்த அரிசியில் பிரியாணி, ஃப்ரைடுரைஸ் போன்ற உணவுகள் செய்யும்போது, பார்த்ததுமே சாப்பிடத் தூண்டுற மாதிரி அழகா இருக்கும்.  அதனால்தான் குழந்தைகள் ரொம்பவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இன்றைக்கு வீடு வரை இந்த அரிசி வந்ததற்கு காரணம் இதுதான்''  என்கிற இளவரசி, அரிசியைப் பற்றி மேலும் அலசினார்.   
 
''எல்லா அரிசியைப் போலத்தான் இதுவும். அரிசி நீளமாக வரவேண்டும் என்பதற்காக இந்த அரிசியைப் பட்டைத் தீட்டும் இயந்திரத்தில் போட்டு ரொம்ப நேரம் தீட்டுவார்கள். இதனால் அரிசியில் உள்ள பெரும்பாலான சத்துகள் வெளியே போய்விடுகின்றன. சாதம் குழையாமல் இருக்க அரை வேக்காட்டில் எடுத்துவிடுவார்கள். இதைச் சாப்பிடும்போது, தொண்டையில் அடைத்துக் கொள்ளலாம். வயிறு நிறையாது. சாப்பிட்ட திருப்தியும் இருக்காது. இதை குழந்தைகள், பெரியவர்கள் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகள் விரும்பிக் கேட்டாலும், அரிசியை குழைய வடித்துக் கொடுப்பதே ரொம்ப நல்லது! அதுவும் முடிந்த வரை எப்போதாவது குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.  என்னதான் இந்த அரிசியில் சமைப்பது சுலபம் என்றாலும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த கைகுத்தல் அரிசி, சிவப்பு குண்டு அரிசி போன்றவற்றுக்கு ஈடாகாது.'' என்று முடித்தார்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5993765964253831187

Post a Comment

1 comment

பழனி. கந்தசாமி said...

கைக்குத்தல் அரிசி அப்படீன்னா என்னங்க?

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item