தே.பொருட்கள்
வேப்பம்பூ - 2 டீஸ்பூன்
மாங்காய்த்துறுவல் - 3/4 கப்
வெல்லம் - 1/2 கப்
வறுத்த முந்திரி - தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை-சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
*வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டவும்.
*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மாங்காய் துறுவலை சேர்த்து நீர் விட்டு வேகவிடவும்.
*மாங்காய் நன்கு வெந்ததும் வெல்லக்கரைசலை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து முந்திரி சேர்த்து இறக்கவும்.
*வேறொரு கடாயில் நெய் விட்டு வேப்பம்பூவை கருகாமல் வறுத்தெடுத்து ஆறியதும் பச்சடியில் சேர்க்கவும்.
பி.கு
மாங்காய்த்துறுவலுக்கு பதில் 1 கப் புளிகரைசலை
சேர்த்து கொதிக்கவிடவும்.பச்சை வாசனை போனதும் டேபிள்ஸ்பூன் அரிசிமாவை
நீரில் கரைத்து சேர்த்து புளிகரைசலில் ஊற்றி கொதிக்கவைத்து கெட்டியாக வரும்போது வெல்லகரைசல்+நெய்யில் வறுத்த வேப்பம்பூவை சேர்த்து இறக்கவும்.
Thanks Menaga
Post a Comment