மருமகன் காப்பீட்டில் இனி மாமனாரும்..இன்ஷூரன்ஸ்,
ஃப் ளோட்டர் பாலிசி பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். கணவன், மனைவி, குழந்தைகள் என நம்முடைய குடும்பத்துக்கு ம...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_3892.html
ஃப்ளோட்டர் பாலிசி பற்றி நம்
எல்லோருக்கும் தெரியும். கணவன், மனைவி, குழந்தைகள் என நம்முடைய
குடும்பத்துக்கு மட்டும் எடுத்துக்கொள்வது ஃப்ளோட்டர் பாலிசி. ஆனால்,
கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்களுக்கு பாலிசி எடுக்கும்போதும் தனித்தனிக்
குடும்பமாகவே ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க வேண்டி இருந்தது. ஒரே பாலிசியில்
மொத்தக் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளும் வசதி
இப்போது வந்திருக்கிறது. இந்த பாலிசி மூலம் 13 குடும்ப உறுப்பினர்கள் வரை
மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளலாம்.
குடும்பத் தலைவர், தன்னுடைய மகன்கள், மகள்கள், அப்பா,
அம்மா, மாமனார், மாமியார், மருமகள், பேரக் குழந்தைகளுக்கு மருத்துவக்
காப்பீடு எடுக்க முடியும். ஆனால், அவரது சகோதரர், சகோதரிக்கு மருத்துவக்
காப்பீடு எடுக்க முடியாது. அதேபோல, ஒரு மாமனார் நினைத்தால் மருத்துவக்
காப்பீட்டில், மருமகனைச் சேர்த்துக்கொள்ள முடியாது. ஆனால், மருமகன்
தன்னுடைய மாமனாரை பாலிசியில் சேர்த்துக்கொள்ள முடியும்.
இந்த பாலிசியில் ஒவ்வோர் உறுப்பினருக்கும்
தனித்தனியாகக் குறிப்பிட்டத் தொகைக்கு மருத்துவக் காப்பீடு செய்துகொள்ள
முடியும். அதாவது, தாத்தாவுக்கு ரூ.4 லட்சத்துக்கும், 25 வயதில் இருக்கும்
பேரனுக்கு ரூ.1 லட்சம் என்றும் தனித்தனியாக எடுத்துக்கொள்ளும் வசதி
இருக்கிறது. இல்லை எனில், அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும்
மொத்தமாகச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகையில் பாலிசி எடுத்துக்கொண்டு யார்
வேண்டுமானாலும் குறிப்பிட்ட தொகைக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் சிகிச்சை
செய்துகொள்ளும் வசதியும்கூட இருக்கிறது.
இந்த பாலிசியில் பிரசவத்துக்கு க்ளைம் வாங்கிக்கொள்ள
முடியும். ஒருவர் தன்னுடைய மகளைக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு இந்த
பாலிசியில் சேர்த்திருந்தால், பிரசவத்தின்போது க்ளைம் வாங்கிக்கொள்ள
முடியும். மேலும் புதிதாகப் பிறக்கிற குழந்தைக்கு, அடுத்த ப்ரீமியம்
கட்டும் வரை க்ளைம் வாங்கிக்கொள்ள முடியும். அடுத்த ப்ரீமியம் கட்டும்போது,
அந்தக் குழந்தையையும் பாலிசியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சில வீடுகளில், ஆண் வாரிசு இல்லாமல், பெண் குழந்தைகள்
மட்டுமே இருப்பார்கள். இந்த நிலையில், பெண்கள் தங்கள் பாலிசியில்
பெற்றோரையும் இணைத்துக்கொள்ளலாம்.
தேவை இருப்பவர்கள் இதையும் பரிசீலிக்கலாம்.
Post a Comment