தக்காளி சாதம்....சமையல் குறிப்புகள்,
தேவையானவை: தக்காளி - அரை கிலோ பொன்னி அரிசி - 3 கப் பெரிய வெங்காயம் - கால் கிலோ பச்சை மிளகாய் - 10 புதினா - 2 கொத...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_3511.html
- தேவையானவை:
- தக்காளி - அரை கிலோ
- பொன்னி அரிசி - 3 கப்
- பெரிய வெங்காயம் - கால் கிலோ
- பச்சை மிளகாய் - 10
- புதினா - 2 கொத்து
- கொத்தமல்லித் தழை - 2 கொத்து
- இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
- தேங்காய், கசகசா விழுது - 4 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
- தண்ணீர் - 6 கப்
- உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
- எண்ணெய் - கால் கப்
- டால்டா - அரை கப்
- பட்டை - 2 துண்டு
- கிராம்பு - 3
- பிரிஞ்சி இலை - ஒன்று
- ஏலக்காய் - 3
- முந்திரி - 8
செய்முறை:
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக
நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும். புதினா, கொத்தமல்லித் தழையை ஆய்ந்து, சுத்தம் செய்து
வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
|
|
|
குக்கரில் டால்டா மற்றும் கால் கப் எண்ணெய்
ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், முந்திரி
போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் வெங்காயம் போட்டு
பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
|
|
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
|
|
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, புதினா மற்றும் கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிடவும்.
|
|
மிளகாய் தூள் வாசனை போனதும் தேங்காய் கசகசா விழுது, உப்பு சேர்த்து கிளறவும்.
|
|
பிறகு 6 கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு, ஒரு தட்டை வைத்து மூடி நுரைத்து ஒரு கொதி வரும் வரை வைக்கவும்.
|
|
கொதி வந்ததும் மூடியைத் திறந்து, அரிசியைக் களைந்து தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து மூடி வைக்கவும்.
|
|
முக்கால் பதம் வேகும் வரை அடிக்கடி கிளறிக்
கொண்டே இருக்கவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் ஒரு முறை நன்கு
அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.
|
|
கிளறிய பிறகு, குக்கரின் மூடியை வைத்து மூடி
வெய்ட் போடவும். மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கிவிடவும். 5
நிமிடங்கள் கழித்து திறந்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
|
|
சுவையும், மணமும் நிறைந்த தக்காளி சாதம் தயார். இதனுடன் ஆனியன் ரைத்தா மற்றும் காய்கறி குருமா சேர்த்து சாப்பிடலாம்.
|
Post a Comment