டிரைஃப்ரூட் பால் பணியாரம் --- சமையல் குறிப்புகள்,
டிரைஃப்ரூட் பால் பணியாரம் தேவையானவை: முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா, உளுந்து, பச்சரிசி தலா 100 கிராம், திக்கான பால் - முக்கா...
https://pettagum.blogspot.com/2013/05/blog-post_2485.html
டிரைஃப்ரூட் பால் பணியாரம்
தேவையானவை: முந்திரிப்பருப்பு,
பாதாம்பருப்பு, பிஸ்தா, உளுந்து, பச்சரிசி தலா 100 கிராம், திக்கான பால் -
முக்கால் லிட்டர், சர்க்கரை - 750 கிராம், ஏலக்காய் - 5, எண்ணெய் - 400
கிராம், குங்குமப்பூ - 10 கிராம்.
செய்முறை: பாதாம்பருப்பை வெந்நீரில்
ஊற வைத்து தோலுரிக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை தனியாகவும்...
உளுந்து, பச்சரிசியை தனியாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அவற்றை
ஒன்றுசேர்த்து நைஸாக அரைக்கவும்.
பாலைக் காய்ச்சி, கொதி வந்தவுடன் சர்க்கரையை சேர்த்துக்
கலக்கவும். நன்கு கொதித்தவுடன்... ஏலக்காயை தோல் நீக்கி பவுடராக்கி,
பாலில் சேர்த்துக் கலக்கி இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அரைத்து
வைத்திருக்கும் விழுதை சிறுசிறு உருண்டைகளாகி பொரித்தெடுக்கவும். இந்த
உருண்டைகளை பாலில் போட்டு... இரண்டு மணி நேரம் ஊறியவுடன் மேலே குங்குமப்பூ
தூவி பரிமாறவும்.
Post a Comment