சோயா சங்ஸ் செட்டிநாட்டு சுக்கா --- சமையல் குறிப்புகள்,
சோயா சங்ஸ் செட்டிநாட்டு சுக்கா தேவையானவை: சோயா சங்க்ஸ் - 20, சின்ன வெங்காயம், பூண்டு பல் - தலா 15, மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், மி...
https://pettagum.blogspot.com/2013/05/blog-post_24.html
சோயா சங்ஸ் செட்டிநாட்டு சுக்கா
தேவையானவை: சோயா சங்க்ஸ் - 20, சின்ன வெங்காயம்,
பூண்டு பல் - தலா 15, மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு
டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்,
முந்திரி - 10 (நெய்யில் வறுத்தது), கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும்
தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கவும். சோயா சங்க்ஸை கொதிக்கும் நீரில் 5
நிமிடம் போட்டு பிழிந்தெடுத்து, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருஞ்சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை
தாளித்து... சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு,
சோயா சங்க்ஸை சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த் தூள்,
மிளகுத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடவும். (அடுப்பை
'சிம்’மில் வைக்கவும்).
5 நிமிடம் கழித்து திறந்து நன்கு சிவக்க வறுக்கவும்.
இறக்கும் சமயத்தில்... வறுத்த முந்திரி, சிறிதளவு கறிவேப்பிலை தூவி ஒரு
புரட்டு புரட்டி இறக்கவும்.
இது, வெங்காய சாம்பாருக்கு சரியான காம்பினேஷன்.
Post a Comment