தேநீர் - ஒரு சுவையான பானம்! --- சமையல் அரிச்சுவடி,

சுவையாக தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க, அரை கப் நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை ப...

சுவையாக தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க, அரை கப் நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை போட்டு, நன்கு கொதி வந்ததும், அத்துடன் அரை கப் பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான, சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளையும் பார்ப்போம்.
மசாலா டீ: ஏலக்காய் - 6, கிராம்பு - 6, சோம்பு - 1 தேக்கரண்டி, தனியா - அரை தேக்கரண்டி, ஜாதிக்காய் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, பட்டை போன்றவற்றை பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்ததும், இந்த பொடியையும், தேயிலையுடன் சேர்த்து போட்டு கொதி வந்ததும், சர்க்கரை, பால் சேர்த்து, வடிகட்டி அருந்தவும். இது, குளிர்காலத்தில் உடம்பிற்கு சூடு கொடுக்கும்; அருமையான தேநீர்.
ரோஸ் டீ: தேநீர் கொதிக்கும் போது, புத்தம் புதிய ரோஜா இதழ்களை போட்டு தேநீர் தயாரிக்கலாம். ரோஜாப்பூ இதழ்களை காயவைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், தேவையான போது உபயோகிக்கலாம்.
கோகோ டீ: குழந்தைகள், சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். இந்த டீயை தயாரிக்கும் போது, தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு அருந்தவும்.
இஞ்சி டீ: அஜீரணம், வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை நீக்கி, நன்கு இடித்து, டீ கொதிக்கும் போது போட்டால், இஞ்சி டீ ரெடி!
ஏலக்காய் டீ: ஏலக்காயை தோலுடன் பொடி செய்து, தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். பலகாரங்கள் செய்ய, ஏலப்பொடி செய்யும் போது, ஏலக்காய் தோலை எறியாமல், சேகரித்து வைத்து உபயோகிக்கலாம்.
எலுமிச்சை டீ: நீரை கொதிக்க விட்டு, தேயிலையை போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி வடிகட்டவும். ஆறியதும், அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து, சில ஐஸ்கட்டிகளைப் போட்டு, பால் இல்லாமல் குடிக்கவும்.
புதினா டீ: சில புதினா இலைகள், துளசி இலைகளோடு, சிறுதுண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டு, 5 மிளகையும் பொடி செய்து போட்டு, நீரை கொதிக்க விடவும். பின், தேயிலை, சர்க்கரை, பால் கலந்து, வடிகட்டி அருந்தவும். இது, ஜலதோஷம், இருமல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.
குறிப்பு:

தேநீர் நம் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் பலமளிக்கும். நரம்பு, தசை மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி, புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதை விட, தேநீர் அருந்துவது நல்லது. அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் நரம்புகளையும், வயிற்றையும் பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர், வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.

Related

சமையல் அரிச்சுவடி 7860870727659728217

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item