பிரெட் பால்ஸ் கிரேவி --- சமையல் குறிப்புகள்,
பிரெட் பால்ஸ் கிரேவி தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 5, தக்காளி - 3, பெரிய வெங்காயம் - 2, கொத்தமல்லித் தழை, புதினா - சிறிதளவு, கரம் மசாலாத...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_7662.html
பிரெட் பால்ஸ் கிரேவி
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 5,
தக்காளி - 3, பெரிய வெங்காயம் - 2, கொத்தமல்லித் தழை, புதினா - சிறிதளவு,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, இஞ்சி -
பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், குடமிளகாய் - (சிறியது), கேரட் - தலா ஒன்று,
பீன்ஸ் - 6, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை தண்ணீர் விட்டு
சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து
எடுத்துக் கொள்ளவும். தக்காளியுடன், புதினா, கொத்தமல்லி சேர்த்து
அரைக்கவும். வெங்காயத்தை தனியாக அரைக்கவும். குடமிளகாய், கேரட், பீன்ஸை
நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு
தாளித்து... பின்னர் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக
வதக்கவும். அதனுடன் வெங்காய விழுது சேர்த்து வதக்கி, தக்காளி விழுதை
சேர்த்து சுருள வதக்கவும். பிறகு குடமிளகாய், கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு
வதக்கியபின் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சோயா சாஸ் சேர்த்து
வதக்கவும். பின்னர் உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு காய்கறிகளை
வேகவிடவும். தண்ணீர் குறைந்து, வெந்து வந்ததும் பொரித்து வைத்துள்ள பிரெட்
பால்ஸ் போட்டு கிளறவும். மேலும் சிறிது நேரம் வைத்திருந்து கிரேவியாக
வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
கேரட், பிரெட் இரண்டும் இனிப்பு என்பதால், காரம் சற்று கூடுதலாக இருந்தால் சுவையை கூட்டும்.
பிரெட் பால்ஸ் கிரேவி: ஊற வைத்து, அரைத்த முந்திரி, பாதாம் சிறிதளவு சேர்த்து தயாரித்தால்... சுவை மேலும் அசத்தும்.
Post a Comment