அடடா... ஆன்டோவா! சமையல் குறிப்புகள்,
ஆன்டோவா தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு, மைதா - தலா அரை கப், சுரைக்காய் துருவல் - 2 கப், வெண்ணெ...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_15.html
ஆன்டோவா
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப்,
கடலை மாவு, மைதா - தலா அரை கப், சுரைக்காய் துருவல் - 2 கப், வெண்ணெய் - 2
டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல், மிளகுத்தூள்,
சீரகம், தேன் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பால் - ஒன்றரை டம்ளர் (அல்லது
தேவைக்கேற்ப), வறுத்த எள் - ஒன்றரை டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு,
செய்முறை: வெண்ணெயுடன் சமையல் சோடா
கலந்து நன்றாக அடிக்கவும். மாவுகளை அதில் சேர்த்துக் கலக்கவும். இதனுடன்
எள் தவிர மற்ற பொருட்களை சேர்த்துக் கலந்து கேக் மாவு தயாரிப்பது போல்
நன்றாக இடித்து மிருதுவாக கேக் மாவு பதத்தில் எடுக்கவும். 'மைக்ரோவேவ்
அவன்’ பேக்கிங் ட்ரேயில் மாவைப் பரப்பி, வறுத்த என்ளை மேலே தூவவும்.
'மைக்ரோவேவ் அவன்’-ஐ ப்ரீஹீட் செய்தபின் ட்ரேயை உள்ளே வைத்து 180 டிகிரி
செல்ஷியஸில் 30-40 நிமிடம் பேக் செய்யவும். குச்சியால் குத்திப் பார்க்கும்
போது மாவு ஒட்டாவிட்டால், எடுத்துவிடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு,
சாஸ் உடன் பரிமாறவும்.
Post a Comment