பருப்பு அடை -- சமையல் குறிப்புகள்,
தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை, கறுப்பு சுண்டல் கடலை, காராமணி, பச்சைப்பயறு, துவரம்பருப்பு...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post.html
தேவையானவை: பச்சரிசி
- கால் கிலோ, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை, கறுப்பு
சுண்டல் கடலை, காராமணி, பச்சைப்பயறு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா
50 கிராம், சுத்தம் செய்து ஆய்ந்த முருங்கைக்கீரை - 2 கப், காய்ந்த மிளகாய்
- 8, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன்,
காய்ந்த மிளகாய், பருப்பு, பயறு வகைகளைச் சேர்த்து 2 மணி நேரம்
ஊறவைக்கவும். இதை மிக்ஸியில் தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.
மாவில் முருங்கைக்கீரை, உப்பு சேர்த்துக் கலக்கி தோசைக் கல்லில் அடையாக
வார்த்து எடுக்கவும்.
இந்த அடைக்குத் தொட்டுக்கொள்ளத் தக்காளி சட்னி அல்லது சின்ன வெங்காயச் சட்னி நன்றாக இருக்கும்.
Post a Comment