ரிச்... சாண்ட்விச்! -- சமையல் குறிப்புகள்,
ஒ ரு காலத்தில் நோயாளிகளின் உணவாய் இருந்த பிரெட், இன்று இளைய தலைமுறையின் விருப்ப உணவாகிவிட்டது. ஸ்நாக்ஸ் கடைக...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_9477.html
ஒரு காலத்தில் நோயாளிகளின் உணவாய்
இருந்த பிரெட், இன்று இளைய தலைமுறையின் விருப்ப உணவாகிவிட்டது. ஸ்நாக்ஸ்
கடைகளிலும் இப்போது சாண்ட்விச்தான் செம ஹிட். இது செய்வதும் சுலபம்,
உடலுக்கும் ஊட்டம்!
ஐஸ்க்ரீம் சாண்ட்விச், சாக்லெட் சாண்ட்விச், சில்லி
சீஸ் சாண்ட்விச் எனப் பல வகைகள், சுவைக்கத் தூண்டும் விதத்தில்
கிடைக்கின்றன. சென்னை, கே.கே.நகர் ஸ்நாக் - ஸாக் உரிமையாளர்களில் ஒருவரான
விஜய் சொல்கிறார்
''சாண்ட்விச்
மிக சிம்பிளான உணவு. டிஷ் சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் டேஸ்டாக இருக்கும்.
விருப்பம் இல்லை எனில், சாட் மசாலா தவிர்க்கலாம். வளரும் குழந்தைகளுக்கு
சீஸ், சாக்லெட், பிரெட், காய்கறிகள் மிகவும் நல்லது.
நடுத்தர வயதினர் சீஸைத் தவிர்த்து, பனீரை
சேர்த்துக்கொள்ளலாம். பீன்ஸ், கேரட், பீட்ரூட், கோஸ் போன்ற காய்கறிகளையும்
துருவிச் சேர்க்கலாம். இனிப்பு, புளிப்பு, காரம் என அத்தனை சுவையும் இதில்
இருக்கிறது என்பதால்தான், சாண்ட்விச் சாப்பிட ஆர்வத்துடன் வருகின்றனர்.''
என்கிறார்.
விஜய் கற்றுத்தரும் சில ஸ்மார்ட் சாண்ட்விச் ரகங்கள் இங்கே...
கிரில்டு வெஜ் சாண்ட்விச்
கிரீன் சட்னி (புதினா, கொத்தமல்லி, புளி, உப்பு
சேர்த்து அரைத்தது) ஒரு பிரெட்டில் தடவி, இதில் குடைமிளகாய், தக்காளி,
வெங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வட்டமாக வெட்டி வைக்கவும். அதன் மேல்,
சாட் மசாலா, கெச்சப், சில்லி ஃப்ளேக்ஸ் (காய்ந்த மிளகாய் விதைப் பவுடர்),
கருப்பு உப்பு தூவி டோஸ்ட் செய்யவேண்டும்.
சில்லி சீஸ் டோஸ்ட்
ஒரு பிரெட் துண்டில் துருவிய சீஸ், மயாமிஸ், சாட்
மசாலா, வட்டமாக நறுக்கிய 6 பச்சை மிளகாய்த் துண்டுகள்... இவற்றை வைத்து,
மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்யவேண்டும்.
சாக்லெட் சாண்ட்விச்
நடலா சாக்லெட் பேஸ்டை ஒரு பிரெட் துண்டில் தடவி, சீஸ்
துருவல், பாதாம் பவுடரையும் தூவவேண்டும். இதை டோஸ்ட் செய்து எடுத்ததும்
சாக்லேட் சிரப் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறலாம். சாக்லேட் சீஸ் உருகும்
என்பதால், உடனே சாப்பிட்டுவிடுவது நல்லது.
ஐஸ்க்ரீம் சாண்ட்விச்
வென்னிலா ஐஸ்க்ரீம் (அ) ஸ்ட்ராபெரி சேர்த்து அதன் மேல்
சாக்லெட் சிரப் விட்டு, சாக்லெட் சிப்ஸ்களைத் தூவ வேண்டும். இதை கிரில்லில்
வைத்து டோஸ்ட் செய்யவேண்டும்.
ஊட்டச் சத்து ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தியின் கருத்து:
சான்ட்விச் செய்ய, கோதுமை பிரெட் பயன்படுத்துவதுதான் மிகவும் நல்லது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கும்.
கேரட், வெள்ளரி, புதினா, தக்காளி போன்ற காய்கறிகள்
சேர்ப்பதால் வைட்டமின் சி, பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பீட்டாகரோட்டின்,
தாது உப்புக்கள் கிடைக்கிறது.
சீஸ், நட்ஸ் சேர்க்கும்போது புரதம், கொழுப்பு,
எனர்ஜி, அதிக அளவு எசன்ஷியல் ஃபேட்டி மற்றும் அமினோ அசிட்
கிடைக்கிறது. நெடுநேரம் பசி எடுக்காமல் இருக்கும். சாக்லேட், ஐஸ்க்ரீம்
சேர்ப்பது அதிக அளவு எனர்ஜி, ஆன்டி ஆக்சிடென்ட் கிடைக்கும்.
ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு சாண்ட்விச், நிஜமாகவெ
ரிச் ஃபுட் தான். நோய்வாய்ப்பட்டவர்கள், உடலுக்குப் போதிய அசைவு
இல்லாதவர்கள் சீஸ், நட்ஸ் வகைகளை தவிர்த்து, அதிக அளவு காய்கறிகளை
சேர்த்துக்கொள்ளலாம்.
Post a Comment