மேக்ரோனி தால் டிலைட் --- சமையல் குறிப்புகள்,
மேக்ரோனி தால் டிலைட் தேவையானவை: வேக வைத்த மேக்ரோனி - 200 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_6036.html
மேக்ரோனி தால் டிலைட்
தேவையானவை: வேக வைத்த மேக்ரோனி - 200
கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் -
4, தேங்காய் எண்ணெய் - 100 மில்லி, துருவிய கேரட், தேங்காய் (இரண்டும்
சேர்த்து) - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு,
கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு -
ருசிக்கேற்ப.
செய்முறை: துவரம்பருப்பு,
கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை அரை மணி ஊற வைத்து, உப்பு, மஞ்சள்தூள்
சேர்த்து ரவை பதத்துக்கு கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் தேங்காய்
எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். இதனுடன் அரைத்த பருப்பு
மசாலா சேர்த்து, பாதி வதங்கிய பின் வேக வைத்த மேக்ரோனி சேர்த்து, மேலும்
உதிராக வரும் வரை கிளறி இறக்கவும். இதில் கொத்தமல்லி, புதினா, துருவிய
கேரட், தேங்காய் சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து கலந்தால்... ஆளை
அசத்தும் மணத்தில், ருசியில் மேக்ரோனி - தால் டிலைட் தயார்.
.
மேக்ரோனி - தால் டிலைட்: மேக்ரோனி இல்லாவிட்டால், அதற்குப் பதில் வேக வைத்த சேமியாவை பயன்படுத்தியும் செய்யலாம்.
Post a Comment