கிரன்ச் சாலட் --- சமையல் குறிப்புகள்,
அப்படியே சாப்பிடலாம்! இ ன்று பெரும்பாலானோர் விரும்பிச் சாப்பிடும் காய்கறி, பழங்களில் செய்யும் சாலட், உடலுக்கு நல்ல ஊட்டத்தையும் ஆரோக...
https://pettagum.blogspot.com/2013/02/blog-post_8013.html
அப்படியே சாப்பிடலாம்!
இன்று பெரும்பாலானோர் விரும்பிச்
சாப்பிடும் காய்கறி, பழங்களில் செய்யும் சாலட், உடலுக்கு நல்ல ஊட்டத்தையும்
ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும். அலுவலகப் பரபரப்பில் அவசர கதியாய் உணவைச்
சமைத்து, அரக்கப்பரக்கச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவதைவிட, சமைக்காமலேயே
சத்துக்களை உட்கொண்டு, உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்வதுதானே
புத்திசாலித்தனம்!
சாலடுக்கு பெயர் போன சென்னை ஹோட்டல் சஞ்சீவனம் தரும்
'கிரன்ச் சாலட்’ இங்கே... கூடவே உணவு ஊட்டச் சத்து நிபுணர் காயத்ரி தரும்
சத்து டிப்ஸ்.
சமைக்க வேண்டாம்... அப்படியே சாப்பிடலாம்.
கிரன்ச் சாலட்
தேவை:
அன்னாசிப்பழம் 50 கிராம், வெள்ளரிக்காய், எலுமிச்சை தலா அரை துண்டு,
தக்காளி 1, மிளகுத்தூள், உப்பு தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை
சிறிதளவு, கடலைப்பருப்பு 50 கிராம்.
வெள்ளரிக்காய், தக்காளி, அன்னாசிப்பழம் இவற்றை வெட்டி
வைத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பைத் தண்ணீரில் சில நிமிடங்கள்
ஊறவைக்கவும். மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஊறவைத்த
கடலைப்பருப்பு, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துவிட்டு, கடைசியில் கொத்தமல்லித்
தழையால் அலங்கரிக்கவும். சாப்பிடச் சுவையாக இருக்கும். காலையில்
சாப்பிடுவது நல்லது.
அன்னாசிப்பழத்தில் நீர்ச் சத்து அதிகம் இருப்பதால்,
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காயிலும் நீர்ச்சத்து
அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எலுமிச்சம் பழத்தில்
வைட்டமின் சி உள்ளது. காயங்களை ஆற்றக்கூடிய தன்மை வைட்டமின் சி க்கு
இருப்பதால் சருமத்திற்கும் நல்லது. கடலைப்பருப்பில் அதிக அளவில்
புரதச்சத்து இருப்பதால் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் கை
கொடுக்கும். செரிமானத்தை மிளகு அதிகரிக்கும்.
Post a Comment