முட்டை குருமா --- சமையல் குறிப்புகள்,
முட்டை குருமா முட்டை குருமா இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, சாதம் அனைத்திற்கும் நன்றாக இருக்கும். எளிய முறையில் முட்டை குருமா செ...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_8.html
முட்டை குருமா
தேவையான பொருட்கள் I
- முட்டை – 4
- பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 2
- தக்காளி – 1
- பிரியாணி இலை – 1
- கல்பாசி – 2
- சீரகம் – 1 /4 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 10 இலைகள்
- மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
- தனியாதூள் – 1 தேக்கரண்டி
- நெய் – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- மல்லிதழை – 4 கொத்து
தேவையான பொருட்கள் II
- தேங்காய் துருவியது – 1 /2 கப்
- முந்திரிபருப்பு – 2
- பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 1 /2 கப்
தேவையான பொருட்கள் III
- பட்டை – 1
- கிராம்பு – 1
- ஏலக்காய் – 1
- பச்சை மிளகாய் – 2
- பூண்டு – 3 பல்
- இஞ்சி – ஒரு துண்டு
- சோம்பு – 1 /4 தேக்கரண்டி
செய்முறை
- தேவையான பொருட்கள் III ல் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- தேவையான பொருட்கள் II ல் கொடுத்துள்ள பொருட்களை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- முட்டைகளை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கல்பாசி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- சிறிது நேரம் வதங்கிய பின்பு, III ல் அரைத்த விழுதைச் சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்(2 நிமிடங்கள்).
- பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- அனைத்து தூள்களையும், உப்பும் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும் அல்லது எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- இறுதியாக தேங்காய் விழுது ,தண்ணீர், முட்டை சேர்த்து கொதிக்க விடவும்.
- குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வைத்து மல்லிதழை தூவி பரிமாறவும்.
Post a Comment