கோஸ் முதியா தேவையானவை: கடலை மாவு - ஒன்றரை கப், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கி வேக ...
கோஸ் முதியா
தேவையானவை: கடலை மாவு - ஒன்றரை கப், கோதுமை மாவு - 2
டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கி வேக வைத்த கோஸ் - அரை கப், எலுமிச்சம்பழம் -
ஒன்று (சாறு எடுத்துக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு
துண்டு, தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் -
ஒரு டேபிள்ஸ்பூன், ஆப்பசோடா - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - சிறிதளவு.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் தவிர, மற்ற
எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து, நீளமாக உருட்டி, எண்ணெய் தடவிய
பாத்திரத்தில் வைத்து வேகவிடவும். வெந்ததை எடுத்து, சிறுசிறு துண்டுகளாக
வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெள்ளை எள் சேர்த்து,
வெட்டி வைத்துள்ள துண்டுகளையும் சேர்த்துக் கிளறி இறக்கினால்...
வித்தியாசமான சுவையில் 'கோஸ் முதியா’ ரெடி!
கோஸ் முதியா: மாவு பிசையும்போது சிறிது கசகசா சேர்த்தால் மேலும் ருசியாக இருக்கும்.
Post a Comment