கொட்டிக் கிடக்குது வேலை... கட்டிக் கொண்டு போகலாம்!' -- வேலை வாய்ப்புகள்,

''இ ன்ஜினீயரிங், ஐ.டி., எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் படித்த பிறகும் வேலைஇல்லாதவர்கள் ...



''இன்ஜினீயரிங், ஐ.டி., எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் படித்த பிறகும் வேலைஇல்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செக்ரெட்டரிஷிப் படித்துவிட்டு, 'வேலை கிடைக்கவில்லை' என்று சொல்பவர்கள்... இங்கே யாரும் இல்லை.''
 இந்தக் கருத்தை நம்ப முடியவில்லைதானே!
ஆனால், ''இதுதான் உண்மை'' என்று அடித்துச் சொல்கிறார்... மத்திய அரசின் 'தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரெட்டரிஷிப் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் தலைவர் நிஸார் அகமது. சென்னையில் உள்ள இந்த அமைப்பின் தென்மண்டல அலுவலகத்தில், இத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போதுதான் இத்தகைய உத்தரவாதத்தைத் தந்தார் நிஸார் அகமது.
பிறகு அவரிடம் பேசியபோது, ''இப்போது இந்தப் படிப்பை படித்து முடித்தவர்களுக்கு மட்டுமல்ல... இன்னும் எத்தனை பேர் வந்தாலும் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. மத்திய அரசின் உயர் பதவிகள், நிர்வாக இயக்குநர்கள், முழு நேர இயக்குநர்கள், கம்பெனி தலைவர்கள் துணைத் தலைவர்கள் என்று பல பணிகளில் அமர முடியும்.
ஆரம்பநிலை, நிர்வாக நிலை, தொழில் நிலை என்று மூன்று வகையாக இந்தப் படிப்பு உள்ளது. ஆரம்ப நிலை 8 மாதங்கள், நிர்வாக நிலை 9 மாதங்கள் மற்றும் தொழில்நிலை 9 மாதங்கள் என மொத்தம் 26 மாதங்கள் இப்படிப்புக்கான காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குள் முடிக்கவில்லை என்றால், மேலும் அவகாசம் அளிக்கப்படும். இதை வீட்டில் இருந்தே படிக்கலாம். வயது வரம்பும் இல்லை. ப்ளஸ் டூ முடித்தபிறகு, இதில் சேரலாம். வேறு பாடப் பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றவர்கள், நேரடியாக நிர்வாக நிலைப் படிப்பில் சேரலாம். இதை முடித்தவர்கள், தொழில்நிலையில் சேரலாம். மொத்த படிப்புக்குமே 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.
படிப்பு முடிந்ததுமே... உங்களைக் கொத்திக் கொண்டு போக நிறுவனங்கள் காத்துக் கிடக்கின்றன. ஆண்டுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் தருவதற்கும் தயாராக இருக்கின்றன. பெண்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் இப்படிப்பு குறித்த விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. வேலை வாய்ப்பு கொட்டிக் கிடக்கும் இந்த துறைக்குள் நுழைவதற்கு அவர்கள் எல்லாம் முன் வரவேண்டும்'' என்று விளக்கமாகச் சொன்னார்!
யோசியுங்கள் மக்களே!

Related

வேலை வாய்ப்புகள் 5177917040791343151

Post a Comment

1 comment

அமுதா கிருஷ்ணா said...

இந்த படிப்பை காலேஜ் மாதிரி செமஸ்டர் முறையில் அல்லது நான் - செம்ஸ்டர் முறையிலோ நடத்தினால் ஏராளமான பேர் இத்துறையில் படித்து வெற்றி பெற முடியும். படித்தா படி இல்லாட்டி போ என்கிற மாதிரியும், 15 மாத இண்டர்ஷிப்பிற்கு இவர்கள் நிர்ணயித்துள்ள சம்பளமும் இன்றைய காலக்கட்டத்தில் மிக குறைவு.நிறைய பேர் படிக்க வரக்கூடாது என்பதில் இவர்கள் கவனமாக இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item