ஸீக்டி---வாசகி கைமணம்
ஸீக்டி தே வையானவை: கோதுமை மாவு, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், நெய் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - சிறிதளவு. செ...
https://pettagum.blogspot.com/2012/12/blog-post_2535.html
ஸீக்டி
தேவையானவை: கோதுமை மாவு, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், நெய் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - சிறிதளவு.
செய்முறை: அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு, வாணலியை அடுப்பிலேற்றி நெய்யை ஊற்றி, கோதுமை மாவை சேர்த்து வறுக்கவும். நன்றாக வறுபட்டவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பொடித்த வெல்லத்தை அந்த சூட்டிலேயே போட்டு... ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும். வெல்லம் இளகி ஒன்று சேர்த்து கெட்டியாக வரும்போது, நெய் தடவிய தட்டில் போட்டு, வில்லைகளாக வெட்டி எடுத்து பரிமாறவும்.
Post a Comment