நிமோனியா சபதம் ஏற்போம்!--- உபயோகமான தகவல்கள்,

ப ச்சிளம் குழந்தைகளையே பெரும்பாலும் தாக்கும் ஒரு கொடிய நோய் நிமோனியா. இது சாதாரண காய்ச்சல் போலத் தெரிந்தாலும், இதன் தாக்கம் அதிகம். ...



ச்சிளம் குழந்தைகளையே பெரும்பாலும் தாக்கும் ஒரு கொடிய நோய் நிமோனியா. இது சாதாரண காய்ச்சல் போலத் தெரிந்தாலும், இதன் தாக்கம் அதிகம்.
நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் ஆட்டிப்படைக்கும். நிமோனியா காய்ச்சலின் பாதிப்புகளையும் அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும் நமக்கு நினைவூட்டும் விதமாக 'நிமோனியா தினம்’ நவம்பர் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
நிமோனியா குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவம¬னையின் நுரையீரல் மற்றும் சுவாச நோய் நிபுணர் டாக்டர்  எஸ்.கல்பனா.
நிமோனியா எப்படி ஏற்படுகிறது?
காற்றின் மூலமாக நுரையீரலில் சில கிருமிகள் பரவுவதால் ஏற்படும் ஒருவகைத் தொற்று இது. இந்தக் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால், அதிகக் காய்ச்சல் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண சளித் தொந்தரவு போலத் தோன்றினாலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்பட்டு, கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போய், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கவலைக்கிடமாக்கிவிடும்.
நிமோனியா யார் யாரையெல்லாம் தாக்கும்?
போதுமான காலம் தாய்ப் பால் குடிக்காத குழந்தைகள், சத்துக் குறைபாடு, குறிப்பாக 'வைட்டமின்’ ஏ குறைபாடு உள்ள குழந்தைகள், பிறக்கும்போதே எடைக் குறைவுடன் பிறக்கும் குழந்தைகள், அதிகநெருக்கடியான பகுதிகளிலும் மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், சிகரெட், விறகு அடுப்பு போன்றவற்றில் இருந்து வரும் புகையை அதிகமாக சுவாசிக்கும் குழந்தைகள் ஆகியோரை நிமோனியா தாக்கும்.
பெரியவர்களையும் நிமோனியா தாக்கும். புகை மற்றும் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆகியோர் நிமோனியா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும்.
மாசுபாடான காற்றை சுவாசித்தாலும் நிமோனியா நோய் தாக்கும்.
அறிகுறிகள்!
இருமல், காய்ச்சல், வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத் திணறல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல், நடுக்கத்துடன் குளிர், நெஞ்சு வலி, பசியின்மை, சோர்வு, சாப்பிட இயலாமை, இவை எல்லாம் நிமோனியாவின் அறிகுறிகள்.
சிகிச்சை!
நிமோனியாவை அதன் தாக்கத்தின் அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிமோனியா, மற்றொன்று தீவிர நிமோனியா. முதல் வகை நிமோனியா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவரைச் சந்தித்து ஐந்து நாட்கள் வீட்டில் இருந்தபடியே முறைப்படி சரியான நேரத்தில் மருந்துகளைச் சாப்பிட்டால், உடனடியாகக் குணம் கிடைக்கும். அப்படி குணமாகவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை மீண்டும் அணுகி அடுத்த கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
தீவிர நிமோனியா தாக்குதலுக்கு உள்ளானவர்களை, அவர்களின் ரத்த நாளங்களில் 'ஆன்டிபயாடிக்’ மருந்துகளைச் செலுத்தியும் பிராண வாயு சிகிச்சை முறை மூலமாகவும் குணப்படுத்திவிடலாம்.
பொதுவாக நிமோனியா பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமான நீர் வறட்சி ஏற்படும். அதை ஈடு செய்யும் விதமாக, அவர்களுக்கு அதிகமான திரவ உணவுகளை வழங்க வேண்டும்.
நிமோனியா வராமல் காப்பது எப்படி?
பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் கட்டாயமாகத் தாய்ப் பால் கொடுக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு இரண்டு வயது வரை தாய்ப் பாலோடு சத்து நிறைந்த திட உணவுகளையும் சீராகக் கொடுக்க வேண்டும்.
பிறந்த குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பு ஊசி உள்ளது. குழந்தை பிறந்து, ஒன்றரை மாத, இரண்டரை மாத மற்றும் மூன்றரை மாத இடைவேளையில் அந்த தடுப்பு ஊசிகளைத் தவறாமல் போட வேண்டும்
வைட்டமின் ஏ மற்றும் ஸிங்க் ஆகிய சத்து மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாரும் சிகரெட் பிடிக்கக் கூடாது.
சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.அவ்வப்போது குழந்தை வயதுக்கு ஏற்ற சரியான எடையுடன் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.இது எல்லோருக்குமே பொருந்தும். குறிப்பாகக் கைக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் உணவு சமைக்கும் முன்பும், சாப்பிடப்போகும் முன்பும் தவறாமல் கைகளை சோப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும்.
நிமோனியாவைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டாலே போதும். நிமோனியாவுக்கு எதிரான போரில் நாம் பாதி ஜெயித்த மாதிரி!

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5159818472452135890

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item