செம்பருத்தி பால்---சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்.... சிகப்பு செம்பருத்தி பூ - 5 பால் - 1 கப் சுகர் லைட் (அ) தேன் - 2 ஸ்பூன் தண்ணீர் - அரை கப் செய்முறை.... • ...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_6604.html
சிகப்பு செம்பருத்தி பூ - 5
பால் - 1 கப்
சுகர் லைட் (அ) தேன் - 2 ஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
செய்முறை....
• செம்பருத்தி பூவின் தண்டு மற்றும் மகரந்தத்தை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்.
• அடுப்பில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் செம்பருத்தி இதழ்களை போட்டு 15 நிமிடம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டிக் கொள்ளவும்.
• பின்னர் அதில் சூடான (அ) குளிர்ந்த பாலை ஊற்றி அதனுடன் சுகர் லைட் (அ) தேன் கலந்து பருகவும்.
• இந்த செம்பருத்தி பால் சுவையான இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது.
Post a Comment