எவ்வாறு முதுமையைதள்ளிப்போடலாம் ---மருத்துவ டிப்ஸ்,
இளமையின் ரகசியத்திற்கு பங்கு அளிக்கும் வைட்டமின் ஈ என்றும் இளமையோடுஇருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்றாலும் நடைமுறையில் அதுசா...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_632.html
இளமையின் ரகசியத்திற்கு பங்கு அளிக்கும் வைட்டமின் ஈ
என்றும் இளமையோடுஇருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்றாலும் நடைமுறையில் அதுசாத்தியமில்லை.எனினும், குறைந்தபட்சம் விரைவில் உடல் முதுமை தோற்றத்தைஅடைவதை தள்ளிப்போடலாம்.
அவ்வகையில்எளிமையான சில உணவுகளை வகைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் எவ்வாறு முதுமையைதள்ளிப்போடலாம்
மருத்துவ பலன் நிறைந்த எலுமிச்சைப்பழம்
காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சைசாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் அதிகளவு உள்ளது.
எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது. எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும்.
இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது. எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவுகோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Post a Comment