தீபாவளி மருந்து--- இயற்கை வைத்தியம்,
தீபாவளி மருந்து மல்லித் தூள் 100 கி., வெல்லம் 100 கி., சீரகத்தூள் 50 கி., சுக்குத் தூள் 25 கி., ஏலக்காய் அரை டீஸ்பூன். வெல்லத்தைத் தண்...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_4939.html
தீபாவளி மருந்து
மல்லித் தூள் 100 கி., வெல்லம் 100 கி., சீரகத்தூள் 50 கி., சுக்குத் தூள் 25 கி., ஏலக்காய் அரை டீஸ்பூன். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அடுப்பில் வைத்து பாகு பதம் வந்ததும், அதில் மல்லித் தூள், சீரகம், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து கிளறுங்கள். இது நன்கு கொதித்து கெட்டியானவுடன் நெய் கொஞ்சம் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். பெரியவர்கள் ஒரு நெல்லிக்காய் அளவுக்கும் சிறுவர்களுக்கு இரண்டரை கிராம் அளவுக்கும் இதை உட்கொள்ளலாம். வாயு தொந்தரவு, அஜீரணம், வயிற்று வலிக்கு நல்ல நிவாரணி!
Post a Comment