குழந்தையின்மை குறை போக்க.. நீங்க ரெடியா?--- ஹெல்த் ஸ்பெஷல்

இன்றைய நிலவரப்படி குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் சிரமப்பட்டு வர்றாங்க. குறைபாடு என்பது காலகாலமா இருந்துட்டு வர்றதுனாலும்கூட இப்போ கொஞ்ச...

இன்றைய நிலவரப்படி குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் சிரமப்பட்டு வர்றாங்க. குறைபாடு என்பது காலகாலமா இருந்துட்டு வர்றதுனாலும்கூட இப்போ கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அதுக்கு நிறைய காரணம் இருக்கு, அதைப்பத்தி பேசி ஒருத்தர் மேல ஒருத்தர் பழியைப்போட்டு நேரத்தை வீணாக்குறதோட ஆக வேண்டிய காரியத்தை பார்த்தா கொஞ்சம் பிரயோசனமா இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னாடி நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்றேன். பேராசிரியர் ஒருத்தருக்கு வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க, இதுக்கு இடையில அந்த பேராசிரியர் என்ன பண்ணியிருக்காரு தெரியுமா?... தனக்கு ஆண்மை இருக்கான்னு டாக்டர்கிட்ட போய் டெஸ்ட் பண்ணியிருக்காரு. இவருக்கு ஆண்மை இல்லைன்னு டாக்டர் சொன்னதும் மனுஷன் தற்கொலை பண்ணிட்டாரு. படிச்ச ஒரு மனுஷனே இப்பிடி ஒரு கோழைத்தனமான முடிவை எடுக்கும்போது சாமானியன் என்ன செய்வான்? சரி இதுமாதிரி பிரச்‌சினை உள்ளவங்களுக்கு நம்ம மூலிகை வைத்தியத்துல சில வழிகள் இருக்கு. முயற்சி பண்ணி பாருங்க, பலனை அனுபவியுங்க!

FILE
கணவனுக்குத்தான் பிரச்சினை, மனைவிக்குத்தான் பிரச்சினைனு இங்க சொல்ல முடியாது. ரெண்டு பேருமே மருந்து சாப்பிடணும். மாதவிலக்கு ஆன மூணாவது நாள் முதல் முத்தின வேப்பிலை நூறு கிராம் எடுத்து கஷாயம் செஞ்சி காலயில வெறும் வயித்துல (ரெண்டு பேரும்) ஆறு நாளைக்கு குடிக்கணும். அதுக்கு அப்புறமா அரச இலை, மா இலை வகைக்கு அம்பது கிராம் எடுத்து கஷாயம் போட்டு நூறு மில்லி வீதம் ஒன்பது நாள் வெறும் வயித்துல சாப்பிடணும். இந்த கஷாயத்த சாப்பிடும்போது சாப்பாட்டுல ராகி, கொத்தமல்லி தழை எல்லாம் கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கோங்க. ராத்திரி சாப்பாடு பாதி அளவுதான் இருக்கணும். இதை சரியா பின்பற்றினா குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு.

FILE
பொண்ணுங்களுக்கு கருப்பைக் கோளாறு இருந்தா அதை சரி செய்றதுக்கு ஈஸியான வழி இருக்கு. அசோகா மரத்து பட்டை, மாதுளம்வேர் பட்டை, மாதுளம் பழ ஓடு சம அளவு எடுத்து நல்லா காய வச்சி இடிச்சி வச்சிக்கோங்க. இதை ஒரு நாளைக்கு ரெண்டு வேளை வீதமா ரெண்டு சிட்டிகை வாயில போட்டு வெந்நீர் குடிக்கணும். இதை தொண்ணூறு நாள் குடிச்சிட்டு வந்தா மலட்டுத்தன்மை போய் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இதுபோக நெல்லிக்காய் சாறுல ரோஜாப்பூவை அரைச்சி அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தா பொண்ணுங்களோட பிரச்சினை நீங்கி தாய்மைப்பேறு கிடைக்கும்.

FILE
இனிமே ஆண்கள் விஷயத்துக்கு வருவோமா? வாழைப்பூ சாப்பிட்டு வந்தா விந்து அதிகரிக்கும். வெத்திலை போடும்போது கூடவே துளசி விதை பொடியை சேர்த்து சாப்பிட்டா தாது கட்டும். நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இது மூணையும் நசுக்கி போட்டு கஷாயம் வச்சி குடிச்சாலும் தாது பலப்படும். வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 4 8 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும். திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.

இப்படி பலவிதமான முறைகள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிடாதீங்க, எதையாவது ஒண்ணை சாப்பிட்டு பலனை அனுபவியுங்க. முருங்கைப்பூ, பிஞ்சு முருங்கை காய், முருங்கை விதை இவை எல்லாத்தையுமே தனித்தனியா பால்ல சேர்த்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.

FILE
ஆண்மை பறி போவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் பலன் கிடைக்கும். அது இல்லாம மருந்து மட்டும் சாப்பிடுறதால எந்த பிரயோஜனமும் இல்லை எ‌ன்‌கிறா‌ர் ந‌ம்ம மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்குமரன். (9551486617)

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6360387001769916152

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item