காலிஃப்ளவர் பஜ்ஜி மிளகாய் ஃப்ரை---சமையல் குறிப்புகள்,
காலிஃப்ளவர் பஜ்ஜி மிளகாய் ஃப்ரை தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று, பஜ்ஜி மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், சோள மாவு - ஒ...
https://pettagum.blogspot.com/2012/10/blog-post_22.html
காலிஃப்ளவர் பஜ்ஜி மிளகாய் ஃப்ரை
தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று, பஜ்ஜி மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை பூக்களாக எடுத்து சுடுநீரில் 10 நிமிடம் போட்டு மூடி, பின்னர் வடிய வைக்கவும். அதனுடன் நறுக்கிய பஜ்ஜி மிளகாய், வெங்காயம், சோள மாவு, அரிசி மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாகப் பிசிறி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
காலிஃப்ளவர்: பஜ்ஜி மிளகாய் ஃப்ரை; பஜ்ஜி மிளகாய் கிடைக்காவிட்டால், அதற்குப் பதில் குடமிளகாயை பயன்படுத்தலாம்.
Post a Comment