பனீர் வெஜ் குருமா--சமையல் குறிப்புகள்,
பனீர் வெஜ் குருமா தேவையானவை: காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு - தலா ஒரு கப் (நறுக்கியது), கேரட், பீன்ஸ் - தலா அரை கப் (நறுக்கியது), பச்சைப...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_9230.html
பனீர் வெஜ் குருமா
தேவையானவை: காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு - தலா ஒரு கப் (நறுக்கியது), கேரட், பீன்ஸ் - தலா அரை கப் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி - அரை கப், வெங்காயம் - 2, தக்காளி - 4, இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், பனீர் துண்டுகள் - 50 கிராம், பட்டை, சோம்பு - தாளிக்க தேவையான அளவு, பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 6, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... பட்டை, சோம்பு போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, நன்றாக வதக்கிய பிறகு காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை சேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய்கள் வெந்ததும் பனீர், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து ஊற்றி, கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
பனீர் - வெஜ் குருமா: பனீருக்கு பதில் டோஃபு (சோயா பனீர்) சேர்த்தும் செய்யலாம்
Post a Comment