சேமியா கொழுக்கட்டை! மினி ரெசிபி!
தேவையானப் பொருட்கள் : சேமியா - 200 கிராம், தேங்காய் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), காய்ச்சிய பால் - 2 கப், அரிசி மாவு - 3 தேக்கரண்டி, நற...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_8450.html
தேவையானப் பொருட்கள்:
சேமியா - 200 கிராம், தேங்காய் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), காய்ச்சிய பால் - 2 கப், அரிசி மாவு - 3 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது), கடுகு, சீரகம், எள் - தலா அரை தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சேமியாவை நெய்யில் வறுத்து, பாலில் முப்பது நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். பின், தேங்காய் துருவல் சேர்த்து, கிளறவும். சிம்மில் வைத்து, பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகியவற்றை கலக்கவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, கையினால் நன்கு மசித்து சிறுசிறு உருண்டை களாக பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

Post a Comment