உணவே மருந்து ! பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்,

பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்...

பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி... இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப் படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம்.

‘நீ இனி குழந்தை இல்லை. குமரி...’ என்பதை உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். தாய்மை என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்பக் கட்டம் அதுதான். பூப்பெய்தும் வயதில் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள் கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம். பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப் போக்குவதுடன், அடுத்தடுத்து அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அம்மாக்களின் பொறுப்பு.

பூப்பெய்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருப்பது சகஜமே. அதிக பட்சம் ஒரு வருடத்துக்குள் அது முறைப்பட்டு விடும். ஆரோக்கியமான பெண்ணுக்கு 28 நாள்களுக்கொரு முறை மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர்ச்சியான உடல்வாகு, தைராய்டு, சினைப்பை அல்லது கருப்பையில் பிரச்னைகள்... இப்படி ஏதேனும் இருந்தால்தான், அந்த சுழற்சி முறை தவறும்.
‘வரும் போது வரட்டும்’ என அலட்சியமாக விடக்கூடிய விஷயமில்லை இது. முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு, புற அழகு என இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு  உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிறது. 

பூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதிரி உணவுகளைக் கொடுப்பதன்மூலம், அவர்களது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும். நகரங்களில் அந்தக் கலாசாரமெல்லாம் ஏது? அதனால்தான் சின்ன வயதிலேயே கண்ணாடி போடுவது, வருடத்தின் எல்லா நாள்களிலும் தும்மல், இருமல், சைனஸ் பிரச்னை என நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷத்தனம் வந்து உட்கார்ந்து கொள்ளும். உடலின் மீதும், புற அழகின் மீதும் அக்கறை
அதிகமாகும். ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற நினைப்பில், உணவைத் தவிர்ப்பார்கள். 

குறிப்பாக காலை உணவு! தொடர்ந்து 3 மாதங்களுக்கு  காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் வரலாம். மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட்டுத்தான் போகும். உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் மருந்துகளின் கைங்கர்யமே! மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு. பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை. 

வெள்ளரி விதை அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகும். முருங்கைக்கீரை, முதுகெலும்பை வலுவாக்கும். தினம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது. தவிர, டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும், மன முரண்பாடுகளையும் போக்கும் குணம் அதற்கு உண்டு. மன பலம் இல்லாத காரணத்தினால்தான், அந்த வயதில் இனக்கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, காதல் எனக் குழம்பிப் போய் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பலரும். மனச்சிக்கலையும் மாதச் சிக்கலையும் தீர்க்கும் சக்தி மாதுளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.  பருவ வயதுப் பெண்ணின் முதல் டாக்டர் அவரது அம்மா. அவர்கள் வீட்டு கிச்சனே, கிளினிக். அம்மாவும் மகளும் இதை உணர்ந்து, புரிந்து நடந்தால் போதும்...  

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6469614463981320698

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item