எப்படி செல் பேசுவது?--உபயோகமான தகவல்கள்,
எப்படி செல் பேசுவது? ''செல்போன் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஸ்வீடன் கரோலி...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_9730.html
எப்படி செல் பேசுவது?
''செல்போன் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஸ்வீடன் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் ஆய்வின்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாகசெல்போன் பயன்படுத்துவோரின் மூளைக்கும் உள்காதுக்கும் இடைப்பட்ட பகுதியில் 'வெஸ்டிபுலார் ஸ்வோனோமா’ என்ற கட்டி வருவதற்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதுவும் மிகமெதுவாக வளரக்கூடிய 'பினைன் டியூமர்’தான்' என்கிறார் காது-மூக்கு-தொண்டை மருத்துவர் திருநாவுக்கரசு. செல்போன் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க அவர் சொல்லும் டிப்ஸ் இது.
ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் ஓரளவு செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும். ப்ளூடூத் ஹெட்போன்கள் கதிர்வீச்சை வெளியிட்டுக்கொண்டே இருப்பதோடு, காதில் இருந்து வாக்ஸ் வெளியேறுவதையும் தடுக்கும். எனவே, பேசாத நேரத்தில் ஹெட்போனைக் கழற்றி வைத்துவிடுங்கள்.
உங்கள் செல்போனின் சிக்னல் பாரில் சிக்னல் குறைவாகக் காட்டுகிறதா? செல்போனில் இருந்து சற்றுத் தள்ளியே இருங்கள். ஏனெனில், செல்போன் சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை முடிந்த அளவு தடுத்திடுங்கள். செல்போனில் பேசும்போதுதான் அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுவதாகக் கூறுகின்றனர். எனவே, செல்லக் குழந்தைபோல் எந்த நேரமும் செல்போனைக் கொஞ்சாமல் முடிந்த மட்டும் பேச்சைக் குறையுங்கள்.
செல்போனில் பேசுவதைக் காட்டிலும் எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது குறைவான அளவு சக்தியையே செல்போன் பயன்படுத்துகிறது.
செல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றிமாற்றி வைத்துப் பேசுங்கள்.
தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிடுங்கள். உடலில் செயற்கைக் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து 30 செ.மீ. தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்திருங்கள்.
Post a Comment