உத்தான பாதாசனம்--ஆசனம்,
செய்முறை: முதலில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்ட...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_9374.html
செய்முறை:
முதலில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டும் தரையோடு படியுமாறு வையுங்கள். முழங்கால் மடங்காமல் பாதங்களை தரைக்கு மேல் ஓரடி உயரம் மட்டும் தூக்கி, அப்படியே 15 வினாடிகள் வைத்திருங்கள். அதற்குபிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இயல்பான சுவாசத்தில் 2-3 முறை செய்தாலே போதுமானது.
பயன்கள்:
அடிவயிற்று உள்ளுறுப்புகளான பெண்ணின் கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் செயல்கள், விறுவிறுப்பாகும். தொந்தி, தொடைசதைகள் குறையும்.
Post a Comment