செட்டிநாடு சிக்கன் கிரேவி---சமையல் குறிப்புகள்-அசைவம்!
செட்டிநாடு சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் : சிக்கன்- ¼ கிலோ, வெங்காயம்-2, தக்காளி-1, மிளகுத்தூள்-50 கிராம், தனியா தூள்-½ டீஸ்பூன், ம...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_7509.html
செட்டிநாடு சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள் :
சிக்கன்- ¼ கிலோ, வெங்காயம்-2, தக்காளி-1, மிளகுத்தூள்-50 கிராம், தனியா
தூள்-½ டீஸ்பூன், மஞ்சள்-¼ டீஸ்பூன், தேங்காய்-½ மூடி, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது-½ டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில், சிக்கன், உப்பு, மஞ்சள், இஞ்சிப்பூண்டு விழுது இவற்றைக் கலந்து, ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து இறுக்கமான மூடிபோட்டு மூடி, அவனில் 5 நிமிடங்கள் ஹையில் குக் செய்யவும். அதன் பிறகு அந்தப் பாத்திரத்தைத் திறந்து மிளகு, தனியாப் பொடி, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதைச் சேர்த்து மூடி, 3 நிமிடங்கள் ஹையில் விடவும். பிறகு அவனிலிருந்து வெளியே எடுத்து, லிட்டைத் திறந்து 3 நிமிடங்கள் மீடியம் ஹையில் வைக்கவும். பாத்திரத்தை 2 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்த பிறகு, சுவையான சிக்கன் கிரேவியை எடுத்துப் பரிமாறவும்.
------------------------------------------------------------------------------------------------
Post a Comment