கத்தரிக்காய் டிக்கா---சமையல் குறிப்புகள்,
கத்தரிக்காய் டிக்கா தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் -4, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், தண்ணீர்-¼ கப், நெல்லிக்காய் பவுடர் (ஆம்லா பவுடர்)-1 தே...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_6936.html
கத்தரிக்காய் டிக்கா
தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் -4, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், தண்ணீர்-¼ கப், நெல்லிக்காய் பவுடர் (ஆம்லா பவுடர்)-1 தேக்கரண்டி, மிளகுத்தூள்-2 டீஸ்பூன், கரம் மசாலா-½ டீஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையான அளவு.
செய்முறை : கத்தரிக்காயைக் காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காகப் பிளந்து, எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து மூடி அவனில் 5 நிமிடங்கள் வேக விடவும். வெங்காயம், உப்பு, ஆம்லா பவுடர், மிளகு, கரம் மசாலாவைக் கலந்து கத்தரிக்காய்க்குள் ஸ்டஃப் செய்து, அவனில் மீடியம் ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். பிறகு 2 நிமிடங்கள் விட்டு, பாத்திரத்திலுள்ள சுவையான கத்தரிக்காய் டிக்காவை சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு மேட்சிங்காகப் பரிமாறலாம்.
---------------------------------------------------------------------------------------------------------
Post a Comment