மோனாஸ் தம் பிரியாணி----சமையல் குறிப்புகள்-அசைவம்!
தேவையான பொருட்கள்: ( 5 பேர் சாப்பிடும் அளவுக்கு) வெங்காயம் - 400 கிராம் தக்காளி - 250 கிராம் இஞ்சி - ...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_31.html
தேவையான பொருட்கள்: (5 பேர் சாப்பிடும் அளவுக்கு)
வெங்காயம் - 400 கிராம்
தக்காளி - 250 கிராம்
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
பட்டை, லவங்கம், கிராம்பு, எலக்காய் - தேவையான அளவு
கோழிக் கறி - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை-1
தயிர் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
தனியாத் தூள் - தேவையான அளவு
செய்முறை:
'' முதலில் வெங்காயம், இஞ்சி, தக்காளி, பூண்டு சேர்த்து பாத்திரத்தில் போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். பின் மஞ்சள் தூள், தனியாத் தூளை பாத்திரத்தில் போட்டு வதக்கிக்கொண்டு தயிர், எலுமிச்சைச் சாறு பிழிந்து ஊற்றிக்கொள்ளவும். பிறகு, கோழிக் கறியை 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து வேகவைக்க வேண்டும். ஊற வைத்து இருந்த அரிசியை வெந்த கோழிக் கறியுடன் சேர்த்து கிளறி விட்டு பாத்திரத்தை மூடி விட வேண்டும். மூடப்பட்ட தட்டுக்கு மேல் அடுப்பு கரித் துண்டுகளை வைக்கவும். கரித்துண்டு வீட்டில் இல்லை என்றால், கொதிக்க வைத்த தண்ணீர் பாத்திரத்தை வைக்கலாம். 10 நிமிடங்களுக்குப் பின் தட்டை எடுத்துவிட்டால், சுடச்சுட 'மோனாஸ் தம் பிரியாணி' ரெடி.
Post a Comment