பிஞ்சு விரல் சோளப்பிஞ்சு--சமையல் குறிப்புகள்,
பிஞ்சு விரல் சோளப்பிஞ்சு தேவையான பொருட்கள்: பேபி கார்ன் (விரல் போல நீளமாக நறுக்கியது) - 250 கிராம், வெள்ளை பெப்பர் பவுடர் - ஒரு டேபிள்...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_3087.html
பிஞ்சு விரல் சோளப்பிஞ்சு
தேவையான பொருட்கள்: பேபி கார்ன் (விரல் போல நீளமாக நறுக்கியது) - 250 கிராம், வெள்ளை பெப்பர் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி பேஸ்ட் (விருப்பப்பட்டால்)- ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா -2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - கால் டேபிள்ஸ்பூன், பிரெட் கிரம்ஸ் - அரை கப், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், முட்டை - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளை பெப்பர் பவுடர், இஞ்சி பேஸ்ட் (விருப்பப்பட்டால்), மிளகாய்த்தூள், முட்டையின் வெள்ளைக்கரு, சோள மாவு, மைதா மாவு, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி அதில் பஜ்ஜியை முக்குவது போல பேபி கார்னை முக்கி எடுக்க வேண்டும். இதனை பிரெட் கிரம்ஸில் போட்டு புரட்டி கையால் நன்கு அமுத்தி விட்டால், பிரெட் கிரம்ஸ் பேபி கார்னில் நன்கு ஒட்டிக் கொள்ளும். இவற்றை கொதிக்கும் எண்ணெயில் போட்டு மொறுமொறுவென பொன்னிறமாக மாறும் வரை வதக்கி எடுத்தால்... பிஞ்சு விரல் சோளப்பிஞ்சு ரெடி!
!
Post a Comment