ஐம்பருப்பு பணியாரம்---சமையல் குறிப்புகள்,
ஐம்பருப்பு பணியாரம் தேவையானவை: பாசிப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - 25 கிராம், துவரம்பருப்பு - 25 கிராம், கொண்டைக்கடலை பருப்பு...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_28.html
ஐம்பருப்பு பணியாரம்
தேவையானவை: பாசிப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - 25 கிராம், துவரம்பருப்பு - 25 கிராம், கொண்டைக்கடலை பருப்பு - 50 கிராம், வேர்க்கடலை - 25 கிராம், அரிசி மாவு - 50 கிராம், வெல்லம் - அரை கிலோ, சமையல் சோடா - கால் டீஸ்பூன், பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஐந்து பருப்பு வகைகளையும் ஒன்றாகக் கலந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, பிறகு அரைக்கவும் (கலவை கெட்டியாக இருக்க வேண்டும்). வெல்லத்தைப் பொடி செய்து கொள்ளவும். அரைத்த பருப்பு மாவு கலவையுடன் அரிசி மாவு, பொடி செய்த வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய், பால் பவுடர், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து, ஒரு மணி நேரம் வைக்கவும். இதுதான் பணியார மாவு கலவை. வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவுக் கலவையை எலுமிச்சம் பழ அளவு உருட்டி, கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுத்தால்... சூப்பர் சுவையில் ஐம்பருப்பு பணியாரம் ரெடி! வித்தியாசமான, சத்துள்ள ஸ்வீட் இது.
ஐம்பருப்பு பணியாரம்: அரிசி மாவுக்கு பதில் அரிசியை அரைத்தும் சேர்க்கலாம்.
Post a Comment