இளமையாக வாழ இளநீர் சாப்பிடுங்க.... மருத்துவ டிப்ஸ்

இளமையாக வாழ இளநீர் சாப்பிடுங்க.... கோடை வெய்யிலின் தாக்கம் இந்த வருடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது கோடை வெப்பத்தை போக்க கம்மங்கூழ், மோர...


இளமையாக வாழ இளநீர் சாப்பிடுங்க....


கோடை வெய்யிலின் தாக்கம் இந்த வருடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது கோடை வெப்பத்தை போக்க கம்மங்கூழ், மோர் சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும் என என் முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன் அத்துடன் இளநீரையும் சேர்த்துக்கொள்ளலாம். இளநீர் இயற்கை தந்த கொடை என்றும் கூறலாம்.இளநீர் கோடை காலத்தில் மட்டுமல்ல எப்போது சாப்பிடக்கூடிய பொருள்.

இளநீர்:
தென்னைமரத்தின் இளங்காயில் உள்ள நீரைக் குறிக்கும். எனினும், இளந்தேங்காயையும் குறிக்கும். இளந்தேங்காய் மட்டை உரிக்கும் முன் பச்சை நிறத்தில் காணப்படும். சில வகைத் தென்னைமரங்களில் காவிநிறத்தில் காய்கள் காய்க்கும். அவை செவ்விளநீர் எனப்படுகின்றன. புறமட்டையை உரிக்காமல் மட்டையோடு உள்ள இளந்தேங்காயின் நுனியைச் சீவி உள்ளிருக்கும் நீரை உறிஞ்சிக் குடிப்பர். தேங்காய் முற்றாமல் இளசாய் இருப்பதால் அரிவாள் முதலியவற்றால் சீவ இயலும். நீரைப் பருகியவுடன், இளநீர்த் தேங்காயைப் பிளந்து முற்றாது இருக்கும் இளகிய பருப்பை உண்பர். இந்த முற்றாத இளகிய பருப்புக்கு வழுக்கை என்று பெயர். 


இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில்  வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இளநீர் நன்கு முற்றி காய்ந்தவுடன் அதிலிருந்து தேங்காய் எடுக்கப்படுகிறது. காய்ந்த இளநீருக்கு நெற்று என்று பெயர்.

இளம் தேங்காயில் உள்ள சுத்தமான நீர் இளநீர். இது சிறிது பால்கலந்த நீர்போன்ற வெண்மை நிறமுடையது. சிறிது துவர்ப்பாயும், தித்திப்பாயும் இருக்கும். தூய கலப்படமற்ற சத்துகள் நிறைந்த இளநீர் தாகத்தைத் தீர்க்கும். இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது. காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டி விடுகின்றன. இதனால்தான் இளநீர் அருந்தியதும் நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது.
காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய மருந்து இது. மதுபான அடிமைகள் இளநீருக்கு அடிமையானால் அவர்கள் ஆரோக்கியம் மிக்க மனிதராகத் திகழ்வார்கள். குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப் பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் உள்ள சர்க்கரையை உடல் உடனடியாகக் கிரகித்துக் கொள்கிறது.

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.

மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.

நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..

பெண்களின் மாத விலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கும் இளநீரே மருந்து.

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.

பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.

காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.

பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.

காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.
மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.

மதுபானம் சாப்பிடுபவர்கள் பானத்துடன் இளநீர் மிக்ஸிங்கிற்காக சேர்த்து சாப்பிட்டால் கேஸ் பிரச்சனைகள் வராது, அடுத்த நாள் காலை உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எந்த உடல் உபாதைக்கும் இடமிருக்காது என இளநீரீன் பயன்களை நான் டைப் செய்து கொண்டு இருக்கும்போது என் நண்பன் கூறியது இது

Related

ஹெல்த் ஸ்பெஷல் 2203690672621126895

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item