ரியல் ஹோம்மேட் சாக்லேட்---சமையல் குறிப்புகள்,
ரியல் ஹோம்மேட் சாக்லேட் தேவையானவை: மில்க் பவுடர் - 3 கப், சர்க்கரை - 2 கப், கோகோ பவுடர் - ஒரு கப், இன்ஸ்டன்ட் காபித்தூள் - ஒரு டீஸ்பூன...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_15.html
ரியல் ஹோம்மேட் சாக்லேட்
தேவையானவை: மில்க் பவுடர் - 3 கப், சர்க்கரை - 2 கப், கோகோ பவுடர் - ஒரு கப், இன்ஸ்டன்ட் காபித்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு கப்.
செய்முறை: சர்க்கரையில் 2 டீஸ்பூன் தண்ணீர் விட்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். உடனே அதில் வெண்ணெயை சேர்த்துக் கலக்கவும். அது கொதித்து மேலே வரும் போது, மில்க் பவுடர், காபித்தூள், கோகோ பவுடர் சேர்த்து கைபடாமல் கிளறவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து பளபளப்பாக சாக்லேட் பதத்தில் வரும்போது இறக்கவும். அதனை பட்டர் பேப்பரில் பரப்பி ஃபிரிட்ஜில் வைக்கவும். விருப்பப்பட்டால் முந்திரிபருப்புத் தூவி பரிமாறலாம்.
கெட்டியானதும் வெளியில் எடுத்து, விரும்பிய வடிவத்தில் 'கட்’ செய்து சாப்பிடலாம். அழகிய பேப்பர்களில் சுற்றி பரிசுப் பொருளாகவும் கொடுக்கலாம்.
ரியல் ஹோம்மேட் சாக்லேட்: பாதாம், பிஸ்தா, முந்திரியை ஒன்றிரண்டாகப் பொடித்து சாக்லேட் கலவையில் சேர்த் தால்... நெட்ஸ் சாக்லேட்டாக ருசியும் மணமும் அதிகமாகும்.
Post a Comment