சன்னா மசாலா---ரம்ஜான் ஸ்பெஷல் ரெசி்பி !
சன்னா மசாலா தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை - 200 கிராம், ரீஃபைண்ட் ஆயில் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சன்னா மசாலா ...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_1211.html
சன்னா மசாலா
தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை - 200 கிராம், ரீஃபைண்ட் ஆயில் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சன்னா மசாலா பவுடர் - 20 கிராம், சமையல் சோடா - அரை டீஸ்பூன், தண்ணீர் - 800 மில்லி, கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: சுமார் எட்டு மணி நேரத்துக்கு கொண்டைக்கடலையை நீரில் ஊற வைக்கவும். அடுப்பின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து, ரீஃபைண்ட் ஆயிலை ஊற்றி, சூடானதும்... பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி துண்டுகளையும் சேர்த்து வதக்கி... பிறகு, சன்னா மசாலா பவுடர் மற்றும் உப்பைச் சேர்க்கவும். நன்கு ஊறிய கொண்டைக்கடலையை அதில் சேர்த்துக் கலந்து, ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு, இத்துடன் 800 மில்லி நீரைச் சேர்த்து சமையல் சோடா போட்டு மூடவும். தீயைக் குறைத்து, சுமார் 40 நிமிடங்களுக்கு வைத்திருந்து இறக்கி, சன்னா மசாலா மீது கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறலாம்.
Post a Comment