பிரண்டையின் மருத்துவ குணங்கள்.2--மருத்துவ டிப்ஸ்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிரண்டையின் மருத்துவ குணங்கள்! பிரண்டை என்ற மூலிகையைப் பற்றியும் அதன் சிறந்த மருத்துவ குணங்களைப் பற்றிய...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிரண்டையின் மருத்துவ குணங்கள்!

பிரண்டை என்ற மூலிகையைப் பற்றியும் அதன் சிறந்த மருத்துவ குணங்களைப் பற்றியும், பிரண்டை உப்பு என்ற அதன் ஆண் - Bi - product பற்றியும் அதை எப்படித் தயாரிப்பது, சாப்பிட வேண்டிய அளவு ஆகியவற்றைக் கூறவும். நீரிழிவு, உடல் வலி,   H-Pylori போன்றவை பிரண்டையின் உபயோகத்தால் சரியாகிவிடும் என்று பலரும் சொல்கிறார்கள். இது சரியா?  

. கொடி இனத்தைச் சேர்ந்தது பிரண்டை. இதில் கணு நிறைய இருக்கும். சுவையில் இனிப்பும் கார்ப்புமுள்ளது. வீரியத்தில் சூடானது. ஜீரணத்தின் இறுதியில் புளிப்பாக மாறக் கூடியது. கப - வாத தோஷங்களைக் குறைக்கக் கூடியது. பித்த தோஷத்தைத் தூண்டிவிடும்.  பசியை நன்றாகத் தூண்டிவிடும். அப்பளத் தயாரிப்பாளர்கள், அப்பளத்தால் பசி மந்தம் ஏற்படக்கூடாது என்றெண்ணி அப்பளத் தயாரிப்பில் பிரண்டையைச் சேர்ப்பார்கள். 

வயிற்றில் கீரிப் பூச்சி, ஆசனவாய் அரிப்பு, மூல உபாதையில் இரத்தப் போக்கு உள்ளவர், மூல முளைகள், ரத்தபேதி, பசியின்மை, வயிற்றுவலி போன்ற உபாதைகளுக்கு பிரண்டையை நெய்விட்டு வதக்கி தனித் துவையலாக்கிச் சாப்பிட்டால் மிகவும் நல்லது. இவற்றை உடனே குறைக்கும்.  பிரண்டையை இடித்து அதிலிருந்து கிடைக்கும் சாற்றை கோபி சந்தனம் அல்லது பூங்காவியுடன் சாப்பிட, மேற்குறிப்பிட்ட உபாதைகள் குணமாகும். மூக்கில் நிறைய ரத்தம்வரும்போது 2 -3 சொட்டு இதன் சாற்றை விட உடனே ரத்தம் நிற்கும்.  கணுவும் தோலும் நீக்கிய பிரண்டையை உளுந்துடன் ஊற வைத்து, வடை போல் தயார் செய்து சாப்பிட, வயிற்றில் அடிக்கடி வாயு நிறைந்து அடைத்து, மூச்சுவிடத் திணறலும் வலியும் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல தீர்வைத் தரும். 

மேலும் குடல் வாயு, கிருமி, வறண்ட மூலம் ஆகியவற்றிலும் நல்லது.  எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டால் இதன் சாற்றையோ, இதனைக் கணு நீக்கி வதக்கியோ சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் சாற்றைத் தடவுவது, சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துத் துணியை நனைத்து, எலும்பு முறிவின் மீது பட்டி கட்டி விடுவது போன்றவை, அங்கு ஏற்பட்ட வலியைக் குறைக்கும். சவரத்தின்போது ஏற்படும் வெட்டுக்காயம், கத்தி வெட்டு முதலியவற்றில் ரத்தக் கசிவை நிறுத்த இதன் சாற்றைத் தடவலாம். 
காதுகளில் சீழ் வரும்போது காதைத் துடைத்துப் பின் இதன் சாற்றைவிடலாம்.  

கணுவையும் பட்டை ஓரத்தையும் கத்தியால் சீவி அகற்றி அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றுடன் உப்பு சேர்த்துச் சாப்பிட, கடுமையான வயிற்றுவலி நீங்கும். இளம் தண்டுகளை பாத்திரத்தினுள் மூடிக் கரியாக்கி 1 -3 சிட்டிகை தண்ணீரில் கரைத்துச் சாப்பிடுவதும் நல்லதே. இதுவே பிரண்டை உப்பு என்று அழைக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. சித்த மருத்துவர்கள் பலரும் பிரண்டை உப்பு பற்றிய விளக்கங்களைத் தரக்கூடும்.  


நீரிழிவில் இதன் பயன்பாடு பற்றி ஆயுர்வேதம் எதுவும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருந்தாலும் கப - வாத தோஷங்களால் ஏற்படக்கூடிய நீரிழிவு உபாதைக்கு பிரண்டையைப் பயன்படுத்தலாம். வயிற்றிலுள்ள வலியைப் போக்குவதால், உடல் வலியையும் குறைக்கக் கூடும். குடல் கிருமிகள் பலதும் அழிவதால் H - Pylori யின் தாக்கம் குறையவும் பிரண்டையைப் பயன்படுத்தலாம்.  கசப்பான பிரண்டைத் துண்டு, நல்ல ஒரு மலமிளக்கியாகும். உளுந்துடன் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால், ஆண்களுக்கு சம்போக சக்தி வளரும். கண்புரை நோய் மாற, பிரண்டையைத் துவையலாக்கிச் சாப்பிடலாம்.

 உடல் வலுவின்மை, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, மூட்டுகளில் ஏற்படும் வலி, பால்வினை நோய் போன்றவற்றுக்குப் பிரண்டையை உள்ளுக்கு உணவாகச் சாப்பிட்டுப் பயன் பெறலாம். நெய்யில் பிரண்டையை வதக்கி, கோலரக்கு, கோதுமை மாவு, மருதம் பட்டை பொடி சேர்த்துப் பாலுடன் கலந்து பருக, முட்டியில் ஏற்படும் வலி குறையும். 

எலும்பு முறிவு விரைவில் கூடிவிடும் என்று சக்ரதத்தர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். பிரண்டையை இடித்துப் பிழிந்த சாறுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து, பிரண்டையின் தண்டை அரைத்து கல்கமாகச் சேர்த்து எடுத்து இளந்தீயில் காய்ச்சி, மாதவிடாய் முடிந்த மறுநாள் முதல் பெண்கள் சாப்பிட, குழந்தைப் பேறு உண்டாகும் என்று வைத்ய மனோரமாவில் குறிப்பு காணப்படுகிறது.

Related

மூலிகைகள் கீரைகள் 6562264082311678771

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item