தித்திக்கும் திராட்சை--உணவே மருந்து.

திராட்சை ஒரு சத்தான எளிதில் செரிக்கக் கூடிய சுவையான பழம். திராட்சை மலைப் பள்ளத்தாக்குகளில் நன்கு விளையும். பச்சை, கருப்பு மற்றும் நீல நிற...

திராட்சை ஒரு சத்தான எளிதில் செரிக்கக் கூடிய சுவையான பழம். திராட்சை மலைப் பள்ளத்தாக்குகளில் நன்கு விளையும். பச்சை, கருப்பு மற்றும் நீல நிறங்களிலும் கிடைக்கிறது.

100 கிராம் திராட்சையில் தண்ணீர் 92 விழுக்காடும், புரோட்டீன் 0.7 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.2 விழுக்காடும், மாவுச்சத்து 7 விழுக்காடும் உள்ளன. கால்சியம் 20 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 20 மில்லி கிராமும், 0.2 மில்லி கிராமும், வைட்டமின் `சி' 31 மில்லி கிராமும் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி சிறிதளவும் உள்ளன.

மலச்சிக்கல்

திராட்சையில் உள்ள குளூகோஸ், சுக்ரோஸ் மற்றும் ஆர்கானிக் அமிலம் இரைப்பையை சுத்தம் செய்வதுடன் உடனடி மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதற்கு தினமும் 350 கிராம் திராட்சை உண்ண வேண்டும். வயிற்றில் ஏற்படும் செரிமானக் கோளாறுகளையும் உடனடியாக சரி செய்யும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு.

இதயக் கோளாறு

இதயக் கோளாறு உள்ளவர்கள் தினமும் ஒருவேளை உணவாக திராட்சையை மட்டும் உண்டு வர வேண்டும். இதனால் இதயத்தில் இருக்கும் வலி சிறிது சிறிதாகக் குறைந்து இதயம் பலப்படுவதுடன் நெஞ்சு படபடப்பும் சரியாகும்.

ஒற்றைத் தலைவலி

ஜம்ஷெத்பூரின் ராஜாவுக்கு திராட்சை தயாரிக்கப்பட்ட ஜூஸை பாட்டில்களில் அடைத்து தினமும் அருந்துவாராம். அரண்மனையில் உள்ளவர்கள் அதனைக் குடிக்காமல் இருக்க அப்பாட்டில்களில் விஷம் உள்ளது எனக் கூறி விடுவாராம். சில நாட்களாக ஒற்றை தலைவலியால் துன்பப்பட்ட அரசி எந்த மருந்தும் பயன் தராத நிலையில் விஷத்தை அருந்தி உயிர்விட நினைத்து திராட்சை ஜூஸை சிறிது சிறிதாக இடைவெளி விட்டு குடித்து விட்டு, தூங்கி விட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால், உயிர் போகவில்லை. ஆனால் ஒற்றைத் தலைவலி மறைந்து விட்டதாம்.

திராட்சை நம்முடைய பற்களில் ஏற்படும் நோய்களைக் களைவதுடன் ஈறுகள் உறுதியாக இருப்பதற்குத் தேவையான சத்துக்களையும் அளிக்கிறது.

திராட்சை இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், சிறு குழந்தைகளுக்கு மலச்சிக்கலினால் ஏற்படும் இழுப்பு நோய் வராமல் தடுக்கின்றது.

கல்லீரலைப் பலப்படுத்தி நன்கு வேலை செய்ய ஊக்குவிக்கிறது.

திராட்சை பழத்தை நன்றாகக் கழுவிய பின்னரே உண்ண வேண்டும். ஜூஸ் தயாரித்தாலும் உடனே அருந்தினால் தான் முழுப் பயனும் நமக்கு கிடைக்கும். ஜூஸை விட பழங்களாகவே சாப்பிடுவது நல்லது. உலர்ந்த பழங்களை ஊற வைத்து உண்ணலாம். சளி, இருமல், தொண்டை வலி இருக்கும் காலங்களில் திராட்சையை தவிர்ப்பது நலம்

Related

உபயோகமான தகவல்கள் 4905202403637108717

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item