பப்பாளியின் மகிமை--பழங்களின் பயன்கள்
பப்பாளியின் மகிமை ...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_5128.html
பப்பாளியின் மகிமை
* அனைவருக்கும் ஏற்ற பழம் பப்பாளி
* கலோரியும், கொழுப்பும் குறைவாக உள்ள பழம் என்பதால் பப்பாளி உடல் எடை
அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. 100 கிராம் பப்பாளியில் கிடைக்கும் கலோரியின்
அளவு 32 தான்.
* பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு போன்றவை ரத்தக் கொதிப்பைக்
குறைக்கும்.
* வயிற்றில் புழு, பூச்சிகளால் அவதிப்படுகின்றவர்களுக்கும் ஜீரணசக்தி
கோளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியில் "பாப்பைன்' எனும் பொருள் உதவுகிறது.
* பலமான விருந்துக்குப் பிறகு பப்பாளி பழத்துண்டுகள் ஐந்தாறு
சாப்பிட்டால் போதும். உடனே ஜீரணமாகிவிடும்.
* உடலில் இறந்து போன செல்களை நீக்கவும், தோலை வளவளப்பாக வைக்கவும்
பப்பாளி சிறந்த கருவி.
* மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகளை எளிதில் குணமாக்கும்.
* 100 கிராம் பப்பாளி பழத்தில் பெண்களின் ரத்தசோகையைப் போக்கும் திறன்
உள்ளது.
* பப்பாளியில் உள்ள " பெப்சின்' என்ற பொருள் மலச்சிக்கலும்,
வயிற்றுக்கோளாறும் வராமல் தடுக்கிறது.
* மாம்பழத்திற்கு அடுத்த வைட்டமின் "ஏ' அதிகம் உள்ள பழம் பப்பாளி.
* பப்பாளியை தொடர்ந்து உட்கொண்டால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.
* ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அரைத்து அதில் பத்து துளி
எலுமிச்சம்பழ ரசத்தை விட்டு ஒருமாதம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெறும். இதே
காலகட்டத்தில் தினமும் ஒரு பப்பாளி பழமும் சாப்பிட்டு வர வேண்டும்.
Post a Comment