கோதுமை மோர்க்கூழ்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் கோதுமை மாவு - 1 கப் சோயா மாவு - 1/4 கப் தண்ணீர் - 2 கப் மோர் - 2 கப் எண்ணெய் - 2 ஸ்...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_29.html
அரிசி மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
சோயா மாவு - 1/4 கப்
தண்ணீர் - 2 கப்
மோர் - 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
உ.பருப்பு - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
செய்முறை:
* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றவும்.
*
கொதிவந்தவுடன் உப்பைப் போட்டு , அரிசிமாவு, கோதுமை மாவு, சோயா மாவு
மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொண்டு, கொதி வந்த நீரில்
கொஞ்சம் கொஞ்சமாக கலந்த மாவைப் போட்டுக் கிளற வேண்டும்.
* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.
* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
* உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.
Post a Comment