வலியின்றி பிரசவம் ஏற்பட துளசி சாப்பிடுங்க……ஹெல்த் ஸ்பெஷல்

வலியின்றி பிரசவம் ஏற்பட துளசி சாப்பிடுங்க…… கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு ...

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது.கர்ப்ப காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் கர்ப்பிணியின் சிந்தனை ஆகிய மூன்றையும் அடிப்படையாக வைத்து ஆயுர்வேதம் ஆலோசனைகளை தெரிவித்துள்ளது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது.
பால், தேன், நெய்
கருவுற்றதும் பால் மற்றும் அடுத்த மாதத்தில் பாலுடன் மூலிகைகளை கலந்து பருகுவது நல்லது. தேன், நெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை பிரசவ காலத்தில் பயனளிக்கும். குழந்தையின் கை, கால், தோல், முடி வளர்ச்சிக்கு நெய் முக்கியம் என்கிறது ஆயுர்வேதம்.
கர்ப்ப காலத்தில் மூன்றாம் மாதம் முதல் தாயின் உணவையே குழந்தையும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விடும். எனவே, இருவரின் உணவும் ஒன்றாக அமைந்து விடும். இந்த நேரத்தில்தான் குழந்தையின் விருப்பத்தை தனது விருப்பமாக தாய் தெரிவிப்பது வழக்கம். அதை நிறைவேற்றினாலும், உடல் பருமன் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாட்டை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.
திரவ உணவுகள்
கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும். பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகளை உணவில் அதிகரிக்க வேண்டும்.
நான்கு மாதம் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் தொப்புள் கொடி மூலம் உணவு போவதால் அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் சிறந்த உணவுகளாக இருக்கும்.சத்து நிறைந்த பருப்பு வகைகள், நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ளவேண்டும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ குணம் கொண்ட அஸ்வகந்தா, சிந்தில பொடி ஆகியவை தாய், சிசு இருவரின் தசைகளுக்கு பலம் அளிக்கும். கொழுப்பு மற்றும் உப்பு, நீர் குறைத்த அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
வலியில்லா பிரசவம்
கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8553465715315352123

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item