பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன ---ஹெல்த் ஸ்பெஷல்

                      பா ட்டியின் வீடு எங்கும் வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது.  விவரம் தெரிந்த நாளில் இருந்து பாட்டி ஆவணி ஞாயிற்றுக் கி...


                      பாட்டியின் வீடு எங்கும் வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது.  விவரம் தெரிந்த நாளில் இருந்து பாட்டி ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதத்தை விடாமல் செய்து வருகிறாள்.

ஆவணி ஞாயிற்றுக் கிழமை என்றால் பாட்டி காலையிலேயே படு பிசியாகி விடுவாள்.

பொழுது புலரும் முன் எழுந்து குளித்து, சூரியனை வணங்கி நெற்றியில் மூன்று விரல்பட திருநீறணிந்து, அடுப்பை மெழுகி சமையலைத் தொடங்கி விடுவாள்.

மதியம் சாமி கும்பிட்டு, விரதம் விடும் வரைக்கும் பச்சைத் தண்ணீர் பல்லில் படாது.   அவ்வளவு தீவிரம்.

அவரைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பச்செடி பயிற்றுக் குழியில் இருந்து பறித்த பச்சை புடலங்காயை அரைவேக்காடாக நெய்விட்டு வதக்கிய பொறியல், பாசிப்பருப்புடன் முந்திரி பருப்பு போட்டு பாயசம் என ஐம்புலன்களையும் கமகமக்க வைக்கும் திவ்வியமான சமையல்.

பின்னர் பேரன் பேத்திகளுடன் அமர்ந்து பூஜை முடிந்து, சாப்பிட்ட மயக்கம், பாட்டி சற்று ஓய்வாக அமர்ந்திருந்தாள்.

“என்ன பாட்டி, ஆவணி ஞாயிற்றுக் கிழமையும், அதுவுமா ஊரே மணக்குது.  எங்களையும் கூப்பிட்டிருந்தா நாங்களும் வந்து சாப்பிட்டிருப் போமுல்ல....” என்று கேட்டபடியே வந்த அம்புஜம் பாட்டி அருகே வந்து அமர்ந்தாள்.

“ஏண்டியம்மா அம்புஜம்... வயசானவங்களுக்கு ஒன்ன மாதிரி பொண்ணுக ஒத்தாசையா இருப்பீங்களா... எங்கள சமைக்க சொல்லி நீங்க சாப்பிட ஆசைப்படுவீங்களா...” என்று அம்புஜம் எதிர்பார்த்தபடியே பாட்டி ஒரு பிடி பிடித்தாள்.

“ஒருவழியாக பாட்டியை சமாளித்த அம்புஜம், எங்க பாட்டி ... உடம்பு இருக்க இருக்க பெருத்துக்கிட்டே போகுது.  கேட்டா தைராய்டுங்குறாங்க.  ஒரு வேலையும் பார்க்க முடியல.. வீட்டுக்கு விலக்காகறதும் மாதா மாதம் தள்ளிக்கிட்டே போகுது.  அதுதான் ஒங்ககிட்டே பார்த்து என்னன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்...” என்று சொன்ன அம்புஜத்தை பரிதாபமாக பார்த்தாள் பாட்டி.

“ஆம்பிளைங்கள விட பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன அதிகமா வரக் காரணம்,  அவங்களுக்கு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்குறதுதாண்டி அம்மா.  நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகும் போது, உடம்புல தேவையில்லாத இடங்கள்ல நிணநீர் அதிகமாக சேர்ந்து உடல் பருமனாகுது.  இதுனால மாதவிடாய் தாமதமாகுறதுக்கும் கூட இது ஒரு முக்கிய காரணம்.  இதையெல்லாம் நம்ம கை வைத்தியத்துல சரிபண்ணிடலாண்டியம்மா..  பயப்படத் தேவையே இல்ல...”

இப்ப நாஞ் சொல்றத கவனமா கேட்டுக்க..

 துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை இதுல 1 கைப்பிடி எடுத்து அதோட, அதிமதுரம், கருஞ்சீரகம், ஜடமாஞ்சி, வில்வவேர்  தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-4, இதையெல்லாம் எடுத்து ஒண்ணா சேத்து கஷாயம் செஞ்சு சாப்பிட்டுக்கிட்டு வா.. எல்லாம் சரியாப்போகும்.. என்றாள் பாட்டி.

பாட்டிக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டு புறப்பாட்டால் அம்புஜம்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4996518848460616604

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item