பூண்டுக் குழம்பு - சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள் மலைப்பூண்டு (பெரியது) - 250 கிராம் மிளகாய் வற்றல் - 10 மல்லிவிதை - 4 தேக்கரண்டி சீரகம் - 8 தேக்கரண்டி உப்பு - தேவையான அள...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_8337.html
தேவையான பொருட்கள்
மலைப்பூண்டு (பெரியது) - 250 கிராம்
மிளகாய் வற்றல் - 10
மல்லிவிதை - 4 தேக்கரண்டி
சீரகம் - 8 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 7 தேக்கரண்டி
வெல்லம் - ஒரு சின்னக்கட்டி
கடுகு - 1 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
மிளகாய், மல்லி, இரண்டையும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும். வறுபட்டதும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி சீரகத்தைக் கலந்து கிளறி ஆற வைத்து நைசாக மிக்சியில் அரைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். பூண்டுகளைத் தோல் உரித்துக் கொள்ளவும். இண்டாலியம் சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டு கடுகு போட்டுத் தாளித்து பூண்டைப் போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் புளி, உப்பு, அரைத்த மசாலா, வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பூண்டுகள் வெந்து குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் தெளித்து வந்ததும் கறிவேப்பிலை போட்டுப் பரிமாறவும். சீரகத்தை அதிகமாக வறுக்க வேண்டாம்.
குறிப்பு : மிளகாய் காரம் பிடிக்காதவர்கள் 7 அல்லது 8 மிளகு சேர்த்து வறுத்து அரைக்கலாம். மிளகாய் வற்றல் 4 சேர்த்தால் சரியாக இருக்கும். கொஞ்சமாவது மிளகாய் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும்.

Post a Comment