குடமிளகாய் மசாலா ஸ்பெஷல்--சமையல் குறிப்புகள்,
குடமிளகாயில் என்ன தயாரித்தாலும் அது ஒருவகை ஸ்டார் ஓட்டல் டிஷ் தான். ஸ்பெஷல் மசாலா நிரப்பிய குடமிளகாயை தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள். வ...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_28.html
குடமிளகாயில் என்ன தயாரித்தாலும் அது ஒருவகை ஸ்டார் ஓட்டல் டிஷ் தான். ஸ்பெஷல் மசாலா நிரப்பிய குடமிளகாயை தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள். விருந்தின் போது பரிமாற ஏற்றது. இதோ செய்முறை:
குடமிளகாய் மசாலா ஸ்பெஷல்
தேவையானவை:
குடமிளகாய் -6
உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் -2
துருவிய தேங்காய் -2 டீஸ்பூன்
மசால் பொடி -1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் -3/4 டீஸ்பூன்
உப்பு -தேவையானஅளவு
ரீபைன்ட் எண்ணை - பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும். அத்துடன் மசால் பொடி சேர்த்து வதக்கி, வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், தேங்காய்த் துருவல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கிளறி அடுப்பை நிதானமாக எரிய விட்டு மூடவும். இரண்டு நிமிடங்கள் அப்படியே விடவும். இப்போது உள்ளே நிரப்ப மசால் ரெடி.
குடமிளகாயை லேசாக கீறி மசாலாவில் 1 டீஸ்பூன் எடுத்து குடமிளகாயினுள் நிரப்பவும். இதே போல் எல்லா குடமிளகாய்க்குள்ளும் மசாலாவை நிரப்பி மூடி விட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து ரீபைன்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும், குடமிளகாயைப் போட்டு முறுகலாகும்வரை புரட்டி எடுக்கவும்.
இப்போது சுவையான குடமிளகாய் மசாலா ரெடி.

Post a Comment