பாதங்கள் உபயோகமான குறிப்புகள்!--அழகு குறிப்புகள்.,

கால்களையும், பாதங்களையும் சுத்தமாக பராமரித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். நடக்கும் போது முழுப் பாதத்தையும் தரையில் பதியும்படி வைத்து அ...

கால்களையும், பாதங்களையும் சுத்தமாக பராமரித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். நடக்கும் போது முழுப் பாதத்தையும் தரையில் பதியும்படி வைத்து அழுத்தமாக ஊன்றி நடக்க வேண்டும். அப்படி செய்தால் கால்களில் நன்றாக ரத்த ஓட்டம் பரவி விரல்களும் பாதங்களும் நன்றாக விரிந்து வளரும். கால் தசைகள் உறுதியாகும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக பரவி புத்துணர்ச்சி பிறக்கும்.

கால்களில் காலணிகளை அணியாமல் மணல் வெளியிலும், புல் தரையிலும் வெறுங் காலுடன் நடப்பது நல்லது.

எப்பொழுதெல்லாம் சாத்தியப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இப்படி வெறுங்காலுடன் நடந்து பழக வேண்டும். அப்பொழுதுதான் கால்களுக்கும் பாதங்களுக்கும் சூரிய ஒளியும் இயற்கை காற்றும் கிடைக்கும். மேலும், கால்களில் ஷூ அல்லது செருப்பு அணிவதால் கால்களுக்கு உண்டாகும் சிரமங்களும் குறையும். கால்களில் வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ளதால் வியர்வை அதிகமாக சுரந்து வியர்வை நாற்றம் இருக்கும். அதனால் கால் உறைகளை (சாக்ஸ்) அடிக்கடி மாற்ற வேண்டும்.

காலணிகளை ஆல்கஹால் கொண்டு சுத்தமாக துடைத்து வெயிலில் காய வைப்பது நல்லது.
நைலான் சாக்ஸ்களை அணிவதை தவிர்த்து வியர்வையை உறிஞ்ச கூடிய பருத்தி சாக்ஸ்களை அணிவதே சிறந்தது. மிகவும் இறுக்கமான ஷூ போடும் போது உராய்வினால் கால்களில் காய்ப்புகள் ஏற்படும். அதை தவிர்க்கவும், அது மேலும் மேலும் தடித்து போகாமல் இருக்கவும் தகுந்த சிகிச்சை பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் கால் ஆணிகள், காய்ப்புகள் ஆகியவற்றை டாக்டரின் ஆலோசனையில்லாமல் கிழித்துவிட கூடாது. அப்படி செய்தால் பெரிய தீங்குகளில் கொண்டு போய் விடக்கூடும்.

இரவில் உறங்க செல்லும் முன்னர் இளம் சூடான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து கால்களை ஐந்து நிமிடம் வைத்திருந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி துடைத்து "யூடிகொலன்" தடவி வந்தால் பாதங்கள் மென்மையாகும்.
வெந்நீரில் உப்பும், டெட்டாலும் சேர்த்து பாதங்களை கழுவினால் கால்களில் தொற்றி கொண்டுள்ள கிருமிகளும் அழுக்குகளும் வெளியேறும். இரவில் நன்றாக தூக்கம் வரும்.

குளிக்கும் போது கால்விரல் நகங்களை சோப்பு போட்டு, உபயோகிக்கப்படாத டூத் பிரஷ்ஷால் தேய்த்தும் கால்விரல்களையும், பாதங்களையும் "ஸ்பாஞ்சால்" தேய்த்தும் சுத்தப்படுத்தினால் அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும்.

இளம் வயதிலேயே சிலருக்கு பாதங்களில் வெடிப்பு தோன்றிவிடும். சிலருக்கு இது நிரந்தரமாகி பாதங்களை விகாரமாக்குவதோடு உபத்திரவமும் கொடுக்கும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால், ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மிதமான வெந்நீரை நிரப்பி அதில் பாதங்களை மூழ்கும்படி வைத்து இருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து பாதங்களை வெளியே எடுத்து நன்றாக துடைத்து, சிறிது கிளிசரின், ஒரு தேக்கரண்டி பன்னீர், சிறிது எலுமிச்சைச்சாறு இவற்றை நன்றாக கலந்து பாதங்களில் தடவி வந்தால் பாதவெடிப்பு மறைந்து பாதங்கள் அழகுபெறும்.

மழைக்காலங்களில் கால் விரல்களின் இடுக்குகளில் எரிச்சல் உண்டாகும். அதை தடுக்க வெளியில் சென்று வந்த பின்னர் உப்பு கலந்த நீரில் காலை நன்றாக கழுவி தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டு குழைத்து இரவில் பாதங்களின் மேல்புறமும் விரல் இடுக்குகளிலும் பூசி வைத்திருந்து காலையில் கழுவினால் பாதங்களில் ஏற்பட்ட எரிச்சல் குணமாகும்.

சூரியகாந்தி எண்ணெயை கால்களில் தடவி வந்தால், கால் நகங்களில் சிதைவு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
வாரம் ஒருமுறை விளக்கெண்ணெயை கால்களில் தடவி ஊறிய பின் கழுவி வந்தால் கால்களில் சுருக்கம் வராமலும் பளபளப்பாகவும் இருக்கும்.

கடுக்காயை அரைத்து பாதங்களில் தடவினால் சேற்றுப்புண் குணமாகும். காய்ச்சிய வேப்ப எண்ணெயை தடவி வந்தாலும் சேற்றுப்புண் குணமாகும்.

வேப்ப எண்ணெயில் மஞ்சள் பொடி கலந்து தடவி வந்தால் கால்களில் ஏற்பட்ட பித்தவெடிப்பு குணமாகும்.

மருதாணி இலையை அரைத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து பாதத்தில் போட்டு ஐந்து மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் பாத எரிச்சல் தீரும்.

Related

அழகு குறிப்புகள். 7156234039577331785

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item