சமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்--வீட்டிலிருந்தே சம்பாதிக்க

மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். ந...


மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும் சுவையோடு சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில்.

வருவாய் (ஒரு நாளைக்கு) :

டீ கடை மற்றும் பேக்கரிகளுக்கு ஒரு சமோசா ரூ.1.50க்கு விற்கப்படுகிறது. உற்பத்தி செய்பவர் நேரில் கடைகளுக்கு விற்பனை செய்தால் 2 ஆயிரம் சமோசா ரூ.1.50 வீதம் வருவாய் ரூ.3 ஆயிரம். ஒரு நாள் உற்பத்தி செலவு போக லாபம் ரூ.927. சிறு வியாபாரிகளுக்கு விற்றால் ஒரு சமோசா ரூ.1.20க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு வருவாய் ரூ.2,400. லாபம் ரூ.327. இதில் நேரில் விற்பது கூடுதல் லாபத்தை தரக்கூடியது. கூலியாட்களை வைத்து சப்ளை செய்து கூடுதல் லாபத்தை சம்பாதிக்கலாம். சமோசாவில் சற்று பெரிய அளவில் தயாரித்தால் ரூ.2க்கு விற்கலாம். சமோசா பெரிய அளவாக இருந்தால் உற்பத்தி எண்ணிக்கை குறையும். லாபம் குறையாது.

சந்தை வாய்ப்பு :

வடை, போண்டா சுடுவது போல் சமோசா தயாரிப்பது எளிதல்ல. அதற்கு முன் உழைப்பும், நேரமும் அதிகம் தேவை. இதனால் டீ கடை மற்றும் பேக்கரி கடைக்காரர்கள் சமோசாவை சொந்தமாக தயாரித்து விற்க ஆர்வம் காட்டுவதில்லை. வெளியே யாராவது தயாரித்து கொடுத்தால் அதை ரூ.1.50க்கு வாங்கி ரூ.2 முதல் ரூ.2.50 வரை விற்கிறார்கள். சமோசாவிற்கு 50 காசு முதல் ரூ.1 வரை அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் தரமாக, சுவையாக சப்ளை செய்பவர்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது.

தயாரிப்பது எப்படி

மைதா மாவு 25 கிலோவுக்கு 15 லிட்டர் தண்ணீர், அரை கிலோ உப்பு சேர்த்து பிசைய வேண்டும். மாவை மொத்தமாக திரட்டி எண்ணெய் தடவி, கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாவை 80 சிறு, சிறு உருண்டையாக்க வேண்டும். அதை சப்பாத்தி கட்டையால் ஒன்றரை அடி அகலத்துக்கு வட்டமாக மெல்லிதாக தேய்க்க வேண்டும். அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க வேண்டும். ஒட்டாமல் இருக்க, ஒவ்வொன்றின் மீதும் எண்ணெய் தடவி அடுக்க வேண்டும்.

இவ்வாறு அடுக்கப்பட்ட 10 வட்டத்தை ஒன்றாக அடுக்கி ஒரு தேய்ப்பு தேய்த்து, பெரிய கல்லில் சுட வேண்டும். அடிப்புறம் வெந்ததும் திருப்பி போட வேண்டும். மேல்புறம் வெந்த பகுதியை  தனியாக பிரித்தெடுக்க வேண்டும். அதற்குள் கீழ்புறம் வெந்துவிடும். அதை புரட்டி போட்டு, பிரித்து எடுக்க வேண்டும். இப்படியே 10 வட்டத்தையும் பிரித்தெடுத்த பின்,  மீண்டும் ஒன்றாக அடுக்கி, ஒரு சமோசாவுக்கு தேவையான அளவுக்கு (சுமார் 5க்கு2 இஞ்ச் நீள அகலம்) பெரிய கத்தியால் வெட்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு 80 உருண்டையையும் தேய்த்து சுட்டு எடுத்து, அடுக்கி வெட்டினால் 2 ஆயிரம் துண்டுகள் கிடைக்கும். அதை  தனித்தனியாக முக்கோண வடிவில்  சுருட்ட வேண்டும். திறப்பிற்குள் உப்பு, மிளகாய்தூள், நறுக்கிய வெங்காய கலவையை போட்டு மூடி, கரைத்து வைத்த மைதா மாவை பசை போல தடவி ஒட்ட வேண்டும். எண்ணெய் சட்டியில் 100 முதல் 150 எண்ணிக்கையிலான சமோசாவை ஒரு நேரத்தில் போட்டு பொரித்து எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் சமோசா தயார்.   

Related

வீட்டிலிருந்தே சம்பாதிக்க 4424828732983125030

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item