தக்காளி ஊறுகாய்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் தக்காளி – நிறய மிளகாய்த்தூள் – ஓரளவு எண்ணெய் – ஓரளவு கடுகு + உளுந்தம்பருப்பு + கறிவேப்பிலை – தாளிக்க சர்க்கரை (சீனி) ...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_3401.html
தேவையான பொருட்கள்
தக்காளி – நிறய
மிளகாய்த்தூள் – ஓரளவு
எண்ணெய் – ஓரளவு
கடுகு + உளுந்தம்பருப்பு + கறிவேப்பிலை – தாளிக்க
சர்க்கரை (சீனி) - கொஞ்சம்
வெந்தயப் பொடி (வெந்தயத்தை வறுத்து அரைத்தது). – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தக்காளி – நிறய
மிளகாய்த்தூள் – ஓரளவு
எண்ணெய் – ஓரளவு
கடுகு + உளுந்தம்பருப்பு + கறிவேப்பிலை – தாளிக்க
சர்க்கரை (சீனி) - கொஞ்சம்
வெந்தயப் பொடி (வெந்தயத்தை வறுத்து அரைத்தது). – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு + உளுந்தம்பருப்பு போடவும். பொறிந்ததும், கறிவேப்பிலை போட்டுத்தாளிக்கவும்.
- நறுக்கிவைத்த தக்காளியை எண்ணெயில் போடவும். கொஞ்சம் தூரமாக நின்றுகொண்டு, ஒரு கையில் பெரிய பாத்திர மூடியையோ, வேறேதுனும் வைத்தோ எண்ணெய் மேலே தெறித்து விடாமல் பார்த்துக்கொண்டு, தக்காளித்துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
- உப்பு + மிளகாய்த்தூள் சேர்க்கவும். அளவு தெரியவில்லையென்றால் பாதகமில்லை. கொஞ்சம் குறைத்தே சேர்த்துவிட்டு, பின்னர் சுவைத்துப் பார்த்து மீதியைச் சேர்த்துக்கொள்ளலாம்.
- தக்காளி கொதிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தானாகவே மசிந்து விடும். கொதியினால் வெளியில் தெறிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்துவிடவும். வேறு வேலையிருந்தால் செய்துகொண்டே அப்பப்ப கிளறிவிடவும்.
- ஓரளவு வத்தியவுடன் சர்க்கரை (சீனி) யையும் வெந்தயப் பொடியையும் சேர்க்கவும்.
- கலவையை சுவை பார்த்து, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
- அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.
- சிலமணி நேரங்கள் கழித்து நன்றாக நீர்ப்பதமே இல்லாமல் வத்தி, எண்ணெயும் தக்காளியும் மட்டுமாக வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- சூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும்
Post a Comment