இஞ்சியின் பயன்கள்---மருத்துவ டிப்ஸ்!

தண்ணீரில் இஞ்சி,சீரகம்,கருவேப்பிலை மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர செரியாமை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும். இஞ்சியை நீர...

  • தண்ணீரில் இஞ்சி,சீரகம்,கருவேப்பிலை மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர செரியாமை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
  • இஞ்சியை நீரில் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர பலகூச்சம் தீரும்.
  • உள்ளங்கை, கால்களில் அதிகமாக தோல் உரிந்தால் இஞ்சி சாற்றில் வெல்லம் கூட்டி குடித்து வர தோல் உரிவதநிற்கும்.
  • இஞ்சிச் சாற்றுடன் பசுவின் கோமியத்தை கலந்து பூசி வர யானைக்கால் நோய் குணமாகும். இஞ்சியை சாறபிழிந்தவுடன் சிறிது நேரம் அசையாமல் வைக்க அடியில் மண்டி தங்கும். இதனை நீக்கி தெளிந்த சாற்றை மட்டுமஇதற்கு பயன்படுத்த வேண்டும்.
  • இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து, தினமும் ஒரிரு துண்டுகளை காலையில் வெறுமவயிற்றில் சாப்பிட்டு வர பித்தம் தணியும். வயிறு சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும்.
  • இஞ்சியுடன் துளசி இலையை, சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கி, நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.
  • இஞ்சி, ஏலக்காய் உள்ளிருக்கின்ற அரிசி, வெல்லம் – இவற்றை சம அளவு எடுத்து தூளாக்கி, பாலில் கலந்து குடித்தவர அடங்காத தாகம் அடங்கும்.
  • இஞ்சிச் சாறு, சங்குப்பூ இலைச் சாறு, தேன் சம அளவு கலந்து குடித்து வர இரவு நேரத்தில் உண்டாகின்ற மிகுதியான வியர்வை தணியும்.
  • சிறிதளவு இஞ்சியை வாயில் இட்டு மென்று உமிழ்நீரை துப்பி விட குரல் கம்மல், தொண்டைப்புண் குணமாகும்.
  • செரியாமையினால் உண்டாகும் கழிச்சலுக்கு, இஞ்சி சாற்றினை தொப்புளைச் சுற்றித் தடவி வரலாம். இதனுடனநெல்லிக்காய் பருப்பை சேர்த்து அரைத்து தடவலாம்.
  • இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, கிராம்பு – இவற்றை சூரணமாக்கி துளசிச்சாறு விட்டு அரைத்து, அதமிளகளவு மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதை இருவேளை உட்கொண்டு வர செரியாமையை நீக்கி நல்ல பசியை உண்டாக்கும்.
  • சிறிதளவு இஞ்சியை தட்டி வெயிலில் காய வைத்து, அதை வெந்நீரில் போட்டு அரை மணி நேரம் ஊறிய பின்னரகுளிக்க உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் நீங்கும்.
  • 10 கிராம் அளவு இஞ்சியுடன் 6 மிளகு, 3 வெள்ளெருக்கம் பூ இவற்றை சிதைத்து சேர்த்து, பின் நீர்ல் இட்டுக் காய்ச்சபாதியாக வற்றியதும் குடித்துவர ஆஸ்துமா, இருமல்,சளி குணமாகும்.
  • இஞ்சியை இடித்து சாறு பிழிந்து அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து தடவி வர பருக்கள் குணமாகும்.
  • இஞ்சிச் சாற்றுடன் வெங்காய சாறும், தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்.
  • இஞ்சிச் சாற்றுடன் சமளவு எலுமிச்சை சாறு, புதினா சாறு, தேன் சேர்த்து தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டு வர செரியாமை, வாந்தி, வயிற்று உப்புசம், மஞ்சள் காமாலை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
  • இஞ்சியை இடித்து சாறெடுத்து சற்று சூடாக்கி, தலையில் பற்றுப் போட தலைவலி, நீரேற்றம் குணமாகும்.
  • வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாறும், தேனும் கலந்து குடித்துவர இருமல், சளி, குணமாகும்.
  • இஞ்சிச் சாற்றுடன், மாதுளம் பழச்சாறு சம அளவு கூட்டி, பாதியளவு தேனும் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமகுணமாகும்.
  • தண்ணீரில் இஞ்சி,சீரகம்,கருவேப்பிலை மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர செரியாமை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
  • ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டசேர்த்து குடித்துவர, இருமல், சளி, ஒக்காளம், சுரம், வாத நோய்கள், பேதி முதலியன குணமாகும். நன்கு பசியெடுக்கும்.
  • இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தலைசுற்றல், வாந்தி குணமாகும். இததொடர்ந்து செய்து வந்தால் மிகுந்த பசி உண்டாகும். எனவே, 3-5 நாட்கள் இதை அருந்தினால் போதுமானது.

Related

மருத்துவ டிப்ஸ் 8287711947654750684

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item