சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குறையும் - Part 1...இய‌ற்கை வைத்தியம்

சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குறையும் - Part 1 கொள்ளு எடுத்து சிறிய குறும்பலாக அதை இடித்து 200 மி.லி தண்ணீர் விட்டு நீர் பாதியாக சுண்டும் ...

சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குறையும் - Part 1

கொள்ளு எடுத்து சிறிய குறும்பலாக அதை இடித்து 200 மி.லி தண்ணீர் விட்டு நீர் பாதியாக சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் அதிக சளி குறைந்து ஆஸ்துமா குறையும்.

10 கிராம் கொள்ளு எடுத்து சிறிய குறும்பலாக அதை இடித்து 200 மி.லி தண்ணீர் விட்டு நீர் பாதியாக சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் அதிக சளி குறைந்து ஆஸ்துமா குறையும்.

ஹிஸாப் இலைகளை கசாயம் செய்து குடித்து வந்தால் இருமல், ஆஸ்துமா குறையும்.

விழுதி இலை சாறுடன் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் கபம் குறையும்.

இஞ்சி, வெள்ளெருக்கம்பூ, மிளகு ஆகியவற்றை சேர்த்து  கஷாயம்  செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

தூதுவளை இலைகளை பாலில் நன்றாக‌ ஊற வைத்து குடித்து வந்தால் காது வலி, காது அடைப்பு குறையும்.

குறிப்பு:    அதிக சளியினால் ஏற்படும் காது வலி, காது அடைப்பு குறையும்.

தூதுவளை இலைகளை பாலில் கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து இரவில் மட்டும் 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பீனிசம் குறையும். மீதியிருக்கும் இலைகளை எடுத்து எண்ணெயில் வதக்கி கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் போன்றவை குறையும்.

சங்கிலை தூதுவளை இலை ஆகியவற்றை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.

தூதுவளை  இலை 10-15, மிளகு ½ டீ ஸ்பூன், அதிமதுரம் 1 துண்டு ஆகியவற்றை ஒரு கப்  தண்ணீர் விட்டு  வேகவைத்துக் காய்ச்சிக்  வடிகட்டி குடித்து வந்தால் சளி குறையும்.

மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி 1 கிராம் அளவு தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.

மணலிக்கீரையை நன்கு நீரில் சுத்தம் செய்து  அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும்  சேர்த்துக் கலக்கி காலை வேளையில் 40 நாட்கள் கொடுத்து வந்தால் சளி, இருமல் குறையும்.

பேய் துளசி இலையை உலர்த்திப்பொடித்து 5 கிராம் எடுத்து 100 மில்லி கொதிக்கும் நீரில் ஊற‌வைத்து வடிகட்டிப் பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சளி தொடர்பான நோய்கள் குறையும்.

சளி ஏற்படும் நேரத்தில் தழுதாழைச் சாற்றை சிறிது எடுத்து அதன் வாசத்தை மூக்கில் முகர்ந்து வர சளி குறையும்.

வெள்ளைப் பூண்டை தோல் உரித்து பசும்பாலில் கலந்து வேக வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு கடைந்து தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, இரவு தூங்க போகும் முன் சாப்பிட நெஞ்சு சளி குறையும்.

சிற்றரத்தை, ஓமம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிவற்றல், சீந்தில் தண்டு ஆகியவற்றை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக மொத்த எடைக்கு பொடித்து பனங்கற்கண்டு பாதியளவு சேர்த்து 2 மேசைக்கரண்டியளவு தண்ணீரில் கொதிக்க வைத்து 60 மில்லியாக சுண்டியப் பின் வடிகட்டி சாப்பிட சளியினால்  ஏற்படும்  காய்ச்சல், இருமல் குறையும்.

பேரரத்தையை வெந்நீர் விட்டு மைய அரைத்து தொண்டை மற்றும் மார்பில் லேசாக தடவி வர சளி குறையும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பிழிந்து சாறு எடுத்து, சிறிது அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து,  பின்பு சிறிது அதிமதுரம் தூளையும் சேர்த்து  காலை மாலை சாப்பிட்டு வர சளி குறையும்.

ஒரு மண் சட்டியில் கண்டங்கத்திரி வேர்,ஆடாதோடை இலை,தூதுவளை இலை,சிற்றரத்தை அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ,பின்பு காலை மாலை அரை டம்ளர் எடுத்துக் கொண்டு  ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டைச் சேர்த்து  குடித்து வர  சளி குறையும்.

கொடிப்பசலை இலைகளைச் சாறு பிழிந்து தேன் கலந்து கொடுத்தால் சளி, இருமல் குறையும்.

வெங்காயத்தாளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம், கோழை குறையும்.

முருங்கை பூ, மூன்று பூண்டு பற்கள், மிளகு சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர சளி குறையும்.

அமுக்க‌ரா வேர் சூரணம்,  தூதுவ‌ளை சம அளவு கலந்து 5 கிராம்  தேனில் தினம், மூன்று வேளை பத்தியத்துடன் கொடுத்து வர காய்ச்சல் குறையும்.

அமுக்கிரான் வேர் சூரணம் 5 கிராம் எடுத்து தேனில் காலை, மாலை கொடுத்து வர‌ சளி குறையும்.

கல்யாண முருங்கை இலைகளைப் பி‌ழிந்து சாறு எடுத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் கபம் குறையும்.

4 ஓமவல்லி இலைகளை எடுத்து நீ‌ரிலிட்டு காய்ச்சி குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் குறையும்.

வால் மிளகை எடுத்து இடித்து தூள் செய்து தேனில் கு‌ழப்பி சாப்பிட்டு வந்தால் சளி, கபம் குறையும்.

அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சளி குறையும்.

ஐந்து கருந்துளசி  இலைகளோடு, இரண்டு மிளகு சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் ஒவ்வாமை குறையும்.

கைப்பிடி நாய்த்துளசி  இலைகளுடன், நான்கு மிளகு சேர்த்து அரைத்து ஒரு கப் வெந்நீரில் கரைத்து அருந்தினால் மார்புச்சளி மற்றும் கபம் குறையும்.

Related

இய‌ற்கை வைத்தியம் 1495609431312187197

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item