‘சைனீஷ் ஃபிரைடு ரைஸ்’---சமையல் குறிப்புகள்
‘சைனீஷ் ஃபிரைடு ரைஸ்’ தேவையான பொருட்கள்: கேரட் - 1, குடைமிளகாய் - 1, வெங்காயம் - 1, வெங்காயத்தாள்-1 பிடி, அஜினோமோட்டோ - ¼ டீஸ்பூன், வெள்ளை ...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_4126.html
‘சைனீஷ் ஃபிரைடு ரைஸ்’
தேவையான பொருட்கள்: கேரட் - 1, குடைமிளகாய் - 1, வெங்காயம் - 1, வெங்காயத்தாள்-1 பிடி, அஜினோமோட்டோ - ¼ டீஸ்பூன், வெள்ளை மிளகுத் தூள்-1 டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன், பாசுமதி அரிசி- 200 கிராம், உப்பு- தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்து 2 நிமிடங்கள் மீடியம் ஹையில் மூடியைத் திறந்து வைத்து குக் செய்யவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள் வைத்து, சுவையான சைனீஷ் ஃபிரைடு ரைஸை சுவைக்கலாம்.
Post a Comment